எதிர்பாரா நேரத்தில் சத்யராஜ் கேட்ட மிகப்பெரிய உதவி… யோசிக்காமல் தலையாட்டிய கேப்டன்… என்னவா இருக்கும்?
சத்யராஜ்
சத்யராஜ் தொடக்கத்தில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தார். அவர் நடித்த முதல் திரைப்படம் “சட்டம் என் கையில்”. இத்திரைப்படத்தை தொடர்ந்து “கண்ணன் என் கைக்குழந்தை’, “ஏணிப்படிகள்” என பல திரைப்படங்களில் சத்யராஜ் நடித்து வந்தார். பாரதிராஜா இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான “கடலோர கவிதைகள்” திரைப்படத்தில் இருந்துதான் சத்யராஜ் முன்னணி கதாநாயகனாக நடித்தார்.
டாப் நடிகர்களின் வில்லன்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற டாப் நடிகர்களின் திரைப்படங்களில் சத்யராஜ் வில்லனாக நடித்திருக்கிறார். “விக்ரம்”, “மிஸ்டர் பாரத்”, “காக்கிச் சட்டை”, “தம்பிக்கு எந்த ஊரு” போன்ற பல திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
விஜயகாந்துடன் சத்யராஜ்
விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார். “நூறாவது நாள்”, “நாளை உனது நாள்”, “ஜனவரி 1”, “சந்தோஷக் கனவுகள்”, “ராமன் ஸ்ரீராமன்” போன்ற பல படங்களை உதாரணமாக கூறலாம்.
“நூறாவது நாள்”
1984 ஆம் ஆண்டு விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த த்ரில்லர் திரைப்படம் “நூறாவது நாள்’. இத்திரைப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். அக்காலகட்டத்தில் மிகவும் பயங்கரமான த்ரில்லர் படமாக இத்திரைப்படம் அமைந்தது.
குறிப்பாக இதில் வரும் சத்யராஜ்ஜின் தோற்றம் பார்வையாளர்கள் பலரையும் பயமுறுத்தியது. அந்த அளவுக்கு வில்லத்தனமான நடிப்பை சத்யராஜ் வெளிப்படுத்தியிருந்தார்.
விஜயகாந்திடம் கேட்ட உதவி
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து சத்யராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது மேடையில் பகிர்ந்திருந்தார். அதாவது “நூறாவது நாள்” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சத்யராஜ்ஜுக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லையாம். ஆதலால் விஜயகாந்த்திடம் “விஜி, என்னால் வாழ்க்கையில் நடிகனாக முன்னுக்கு வர முடியவில்லை. நான் இயக்குனர் ஆகலாம் என்று இருக்கிறேன். உங்க கால்ஷீட் கொடுத்தீங்க என்றால் நான் உங்களை வைத்து படம் எடுத்து இயக்குனர் ஆகிவிடுவேன்” என கேட்டாராம்.
இதையும் படிங்க: “திமிரு பிடிச்ச பெண்ணை அடக்கி காட்டிய ரஜினிகாந்த்”… படம் பார்த்துவிட்டு ஜெயலலிதா அடித்த கம்மென்ட் என்ன தெரியுமா??
அதற்கு விஜயகாந்த் உடனே சரி என்று தலையாட்டி விட்டாராம். எனினும் விஜயகாந்த்தை வைத்து இயக்கும் வாய்ப்பு சத்யராஜ்ஜிற்கு அமையவில்லை. பின்னாளில் சத்யராஜ் “வில்லாதி வில்லன்” என்ற திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படத்தில் சத்யராஜ் மூன்று வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.