மு.க.ஸ்டாலின் இல்ல.. முதுகெலும்புள்ள ஸ்டாலின்.. விஜயை மறைமுகமாக தாக்கிய சத்யராஜ்

sathya
Vijay: நேற்று சென்னையில் சூரிய மகள் 2025 என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நடிகர் சத்யராஜ் மற்றும் பிரபு என பல பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசிய போது விஜயை மறைமுகமாக தாக்கி சில விஷயங்களை பேசியிருந்தார்.
அதாவது தமிழ் நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். மு.க.ஸ்டாலின் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். ஏனெனில் அவருடைய முதுகெலும்பு வெறும் எலும்புகளால் ஆனது அல்ல. அதற்கு காரணம் அவசரக்காலத்தில் மிசாவில் உள்ள வைத்து லத்தி சார்ஜ் எல்லாம் வாங்கிய அந்த எலும்பு வீக்காகத்தான் இருக்கும்.
ஆனால் அவருடைய முதுகெலும்பு எலும்புகளால் ஆனது அல்ல. தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையாலும் பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தாலும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நெஞ்சுக்கு நீதியாலும் உருவானது என்று கூறினார் சத்யராஜ். சமீபத்தில் தவெக சார்பில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது விஜய் தனது தொண்டர்கள் மத்தியில் உரத்த குரலோடு திமுகவை எதிர்த்தும் ஒன்றிய அரசை எதிர்த்தும் சில விஷயங்களை பேசியிருந்தார்.
திமுகவை பற்றி குறிப்பிடும் போது திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே என்று ஆவேசமாக பேசி திமுகவின் நிலைப்பாடையும் அவர்களால் எந்த பயனும் இல்லை என்பது போலவும் பேசியிருந்தார். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சத்யராஜ் நேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் சமீபத்தில்தான் இணைந்தார்.

அவரும் திமுகவில் இணைந்த மறு நாளே விஜயை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார். இப்போது சத்யராஜ் பேசியதும் வரும் தேர்தலில் விஜய்க்கு எதிராக பிரச்சாரம் செய்ய சத்யராஜை திமுக பயன்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் சத்யராஜின் மகள் சிபி சத்யராஜ் தீவிர விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.