Cinema History
எனக்கு ஜோடியா யாருமே நடிக்க மாட்றாங்க!.. நடிகையிடம் புலம்பிய சத்தியராஜ்…
கோவையை சேர்ந்த சத்தியராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரின் படங்களை பார்த்த பின்னர் அவருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. 6.2 அடி உயரம். கொட்டிய தலை முடி என இருந்தாலும் நம்பிக்கையுடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.
ஒருகட்டத்தில் வில்லன்களில் அடியாட்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது பக்கம் பக்கமாக வசனம் பேசும் சத்தியராஜ் ஆரம்பத்தில் பல படங்களில் ‘யெஸ் பாஸ்’ என்கிற வசனம் மட்டுமே பேசியிருக்கிறார். ஒருகட்டத்தில் கதாநாயகனின் தங்கையை கற்பழிக்கும் வேடத்திற்கு புரமோஷன் ஆனார். பல படங்களில் கற்பழிக்கும் காட்சிகளில் நடித்தார்.
இதையும் படிங்க: அவரை போல ஒருத்தர பார்க்கவே முடியாது!. நடிகர் செஞ்ச வேலையில் நெகிழ்ந்து போன சத்தியராஜ்!..
சத்தியராஜுக்கு வித்தியாசமான கெட்டப் மற்றும் வேடங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வைத்தவர் மணிவண்ணன்தான். நூறாவது நாள் படத்தில் மொட்டை தலை, ஜெர்க்கின், ரவுண்டு கண்ணாடி அணிந்து சத்தியராஜ் செய்த அலப்பறை ரசிகர்களிடம் அவரை பிரபலமாக்கியது.
வில்லனாக நடித்து கொண்டிருந்த அவரை பாரதிராஜா தனது கடலோர கவிதைகள் மூலம் ஹீரோவாக மாற்றினார். ஆனாலும் சத்தியராஜுக்கு ஹீரோ வாய்ப்பு தொடர்ந்து வரவில்லை. அப்படியே கிடைத்தாலும் அப்போது பிரபலமாக இருந்த நடிகைகள் யாரும் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்வரவில்லை.
இதையும் படிங்க: என் வாழ்க்கையை மாத்தினதே அவர்தான்!. மறக்க மாட்டேன்!. ரஜினி பற்றி நெகிழும் சத்தியராஜ்…
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய நடிகை நளினி ‘நானும் சத்தியராஜும் அண்ணன் – தங்கை போல பழகினோம். பல படங்களில் என்னை தூக்கி கொண்டு போகும் வில்லனாக நடித்திருக்கிறார். ஒருநாள் என்னிடம் ‘எனக்கு ஜோடியாக நடிக்க யாருமே வரமாட்றாங்க.. நீ நடிக்கிறியா?’எனக் கேட்டார். ‘அதனாலென்ன நான் நடிக்கிறேன்’ என கூறினேன். அப்படி அவருக்கு ஜோடியாக நடித்த படம்தான் இரவு பூக்கள்’ என நளினி சொன்னார்.
ஆனால், ஒருகட்டடத்தில் சத்தியராஜுடன் ராதா, அம்பிகா, சுகன்யா என பல கதாநாயகிகளும் ஜோடி போட்டு நடித்தனர். 90களில் ஹீரோவாக பல படங்களிலும் கலக்கிய சத்தியராஜ் இப்போது குணச்சித்திர நடிகராக மாறி அப்பா வேடங்களில் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.