சிவகார்த்திகேயனை நம்பி “லவ் டூடே” படத்தை புறக்கணித்த சத்யராஜ்… ஆனா இப்போ என்ன ஆச்சுன்னா??

Published on: November 9, 2022
Sivakarthikeyan and Sathyaraj
---Advertisement---

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “பிரின்ஸ்” திரைப்படம் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. வழக்கம்போல் சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புதான் “பிரின்ஸ்” திரைப்படத்திற்கும் இருந்தது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆதலால் “பிரின்ஸ்” திரைப்படத்திற்கான வரவேற்பு வெகுவாக குறைந்தது.

Prince
Prince

“பிரின்ஸ்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற ஆங்கிலேயர் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் சத்யராஜ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் “லவ் டூடே” திரைப்படத்திலும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

Love Today
Love Today

இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி, சத்யராஜ் குறித்து ஒரு முக்கிய செய்தியை தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார். அதாவது “பிரின்ஸ்” திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு அத்திரைப்படத்தை குறித்து சத்யராஜ் மிகவும் சிலாகித்து பேசி வந்தார். ஆனால் இப்போது பிரின்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்துவிட்டது. லவ் டுடே மிகப்பெரிய வெற்றியை அடைந்துவிட்டது.

இந்த நிலையில் சத்யராஜ் தனது நண்பர் ஒருவரிடம் ‘இந்த பிரின்ஸ் படத்தை அவ்வளவு நம்பியிருந்தேன். ஆனால் அது ஓடவே இல்லை. லவ் டூடே திரைப்படம் இந்த அளவுக்கு ஓடும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை’ என கூறினாராம்.

இதையும் படிங்க: ஹிட் இயக்குனருடன் நடிக்க மறுத்த விஜய்… சிறு வயதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… இதுதான் காரணமா??

Sathyaraj
Sathyaraj

மேலும் லவ் டூடே படத்திற்கு ஐந்து நாட்கள்தான் முதலில் கால்ஷீட் கொடுத்தாராம் சத்யராஜ். ஐந்து நாட்களில் எடுக்குமளவுக்குத்தான் தனது கதாப்பாத்திரம் இருக்கிறது, இதில் நடித்து என்ன செய்ய என்று முதலில் லவ் டூடேவில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். அதன் பின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவரது கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை கூறிய பிறகுதான் சத்யராஜ் ஒத்துக்கொண்டாராம்” என தனது வீடியோவில் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.