“தமிழர்களை கேவலப்படுத்தாதீங்க”… ஹிந்தி படத்துக்கு சத்யராஜ் போட்ட கண்டிஷன்…

by Arun Prasad |
Chennai Express
X

Chennai Express

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சத்யராஜ், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக “பாகுபலி” திரைப்படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலமாகியது.

இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். இதில் சத்யராஜ் தமிழராக நடித்திருந்தார்.

Sathyaraj

Sathyaraj

“சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படம் ஷாருக் கானின் கேரியரிலேயே முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் சமீபத்தில் “லவ் டுடே” திரைப்படம் குறித்த பேட்டியில் கலந்துகொண்ட சத்யராஜ், “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் நடித்தபோது போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

“சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது சத்யராஜ் படக்குழுவினரிடம் சில நிபந்தனைகள் போட்டாராம். அத்திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தீபிகா படுகோன் கதாப்பாத்திரத்திற்கு தந்தையாக சத்யராஜ் நடித்திருந்தார். ஷாருக் கான், சத்யராஜ்ஜை எதிர்த்து பேசுவது போல் பல வசனங்கள் இடம்பெறும்.

இதையும் படிங்க: “கண்ணு தெரியாதவங்க மாதிரி நடிக்கனும்…” உண்மையாகவே தடுக்கி விழுந்த சீயான் விக்ரம்… டெடிகேஷன்னா இதுதான்!!

Chennai Express

Chennai Express

ஆதலால் அந்த தந்தை கதாப்பாத்திரத்தை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது போல் வசனம் வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் தமிழர்களை மொத்தமாக தாக்கிப் பேசுவது போன்ற வசனங்களை எழுதக்கூடாது என நிபந்தனை விதித்தாராம் சத்யராஜ். அந்த நிபந்தனைகளுக்கு படக்குழு ஒத்துழைப்பு அளித்த பிறகுதான் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். என்னதான் ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், தமிழர்களை விட்டுக்கொடுக்காத அவரின் குணம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

Next Story