பிரசாந்த் சினிமாவில் நடிக்க காரணமே சத்தியராஜுதான்! - உண்மையை உடைத்த தியாகராஜன்

by சிவா |   ( Updated:2023-05-15 11:20:08  )
sathyraj
X

sathyraj

தமிழ் சினிமாவின் 80களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தியாகராஜன். ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் கலக்கியுள்ளார். மலையூறு மம்பட்டியான், நீங்கள் கேட்டவை என இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றுள்ளது. ரஜினி போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் தியாகராஜன் நடித்துள்ளார்.

prashanth

இவரின் மகன் பிரசாந்த் ‘வைகாசி பொறந்தாச்சி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஒரே படத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர்தான். விஜய், அஜித்துக்கெல்லாம் சீனியர் இவர். அதன்பின் பல படங்களில் நடித்து முன்னணி இளம் நடிகர்களில் முக்கியமானவராக இருந்தார். இவருக்கு நிறைய பெண் ரசிகைகளும் இருந்தனர். ஆனால், அவரின் திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் வாய்ப்புகளை இழந்து தற்போது வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.

prashnath

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவரின் அப்பா தியாகராஜன் ‘பிரசாந்த் பற்றி சத்தியராஜ்தான் முதலில் திரையுலகில் பலரிடம் சொன்னார். ஒருறை முறை பிரசாந்தை பார்த்த சத்தியராஜ் அவருக்கு தெரிந்த எல்லோரிடமும் ‘தியாகராஜனே இன்னும் திருமணம் ஆகாதவர் போலத்தான் இருக்கிறார். ஆனால் அவருக்கு ஹேண்ட்சம்மாக ஒரு மகன் இருக்கிறார். ஹீரோவாக நடிக்க வைக்கலாம்’ என பலரிடமும் சொல்லிவிட்டார். அதன்பின்னர்தான், வைகாசி பொறந்தாச்சி படத்தில் பிரசாந்த அறிமுகமானார்’ என தியாகராஜன் பேசியுள்ளார்.

Next Story