sathayaraj: சிங்கிள் பேரண்டாக சத்யராஜ் படும் அவஸ்தை.. மனைவிக்கு இப்படி ஒரு நிலைமையா?

Published on: November 10, 2024
sathyaraja
---Advertisement---

Sathyaraj : தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் நடிகர் சத்யராஜ். ஆரம்பகால கட்டத்தில் வில்லன், குணச்சித்திர நடிகர், துணை நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த சத்யராஜ் ஹீரோவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் ஹீரோவாக நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த படங்களாக வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை, கடலோரக்கவிதைகள் போன்ற படங்களை சொல்லலாம்.

குசும்புக்கார மனிதர்: கோவையை பூர்வீகமாக கொண்ட சத்யராஜ் ஊருக்கு ஏற்றாற்போல கொஞ்சம் குசும்பு பிடித்தவராகவும் இருப்பவர். கோயம்புத்தூர் குசும்பு என்று சொல்வார்கள். அதுவும் அந்த ஊர் பாஷையுடன் நக்கலாக பேசுவதில் வல்லவர். இவருடன் மணிவண்ணனும் சேர்ந்து அடிக்கும் லூட்டி இருக்கே? சொல்லி மாளாது. அதுமட்டுமில்லாமல் கவுண்டமணியுடனான காமெடி காட்சி இன்று வரை யாராலும் மறக்க முடியாது.

இதையும் படிங்க: Ajith: என்னது!… அடுத்த வருஷம் பொங்கலுக்கு இரண்டுமே இல்லையா?!… ஏமாற்றத்தில் அஜித் ஃபேன்ஸ்..!

சத்யராஜ் மற்றும் கவுண்டமணி காம்போவில் ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கின்றன. அத்தனை படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது சத்யராஜ் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார் சத்யராஜ்.

sathya
sathya

சிறந்த குணச்சித்திர நடிகர்: ஒரு காலகட்டத்திற்கு பிறகு ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு அப்பாவாக, மாமனராக என ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மாறினார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ராஜாராணி படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்து இப்படி ஒரு அப்பா நமக்கில்லையே என்று அனைவரையும் ஏங்க வைத்தார் சத்யராஜ்.

குடும்பம்: சத்யராஜுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார். மகன் சிபிராஜ் ஒரு நடிகர். இவரும் பல படங்களில் நடித்திருக்கிறார். மகள் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நெட்டிசன்களிடம் சிக்கியதும் உண்டு.

இதையும் படிங்க: Nepoleon: ஆறு மாதம் கழித்து தனுஷுக்கு ‘மீண்டும்’ திருமணம்?

மனைவிக்கு கோமா: இந்த நிலையில் சத்யராஜ் மனைவி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக அவருடைய மகள் திவ்யா சமீபத்தில் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவருக்கு PEG குழாய் மூலம்தான் உணவு வழங்கப்படுகிறதாம். இதனால் அவர்கள் மிகவும் மனமுடைந்து போய்விட்டனராம். இருந்தாலும் நம்பிக்கையோடு மருத்துவ முன்னேற்றத்திற்காக காத்திருப்பதாக திவ்யா கூறியிருக்கிறார். மேலும் இத்தனை வருடங்களாக சத்யராஜ் சிங்கிள் பேரண்டாக இருக்கிறார் என்றும் திவ்யா கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.