இயக்குனராகவும், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவில் கலக்கியவர் மணிவண்ணன். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர். கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குனரானவர். அதன்பின் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். அவற்றில் பெரும்பாலானவை வெற்றிப்படங்கள்தான்.
அதிலும் சத்தியராஜை வைத்து மணிவண்ணன் இயக்கிய பல படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. அதிலும், 100வது நாள், 24 மணி நேரம், ஜல்லிக்கட்டு, அமைதிப்படை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சத்தியராஜ், மணிவண்ணன் இருவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எனவே, திரையுலகில் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். சத்தியராஜை வில்லனாகவும் சரி, கதாநாயகனாகவும் சரி விதவிதமான வேடங்களில் ரசிகர்கள் ரசிக்கும்படி அவரை காட்டியது மணிவண்ணன்தான்.
சத்தியராஜ் பேசி ரசிகர்களிடம் பெரிதும் ரசிக்கப்பட்ட ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே’ என்கிற வசனம் கூட மணிவண்ணன் எழுதியதுதான். அமைதிப்படை படத்தில் மணிவண்ணன் அமைத்த அமாவாசை வேடம் ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பை பெற்றது.
சத்தியராஜும், மணிவண்ணனும் கோவை அரசு கலை கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். சத்தியராஜ் அட்வான்ஸ்டு இங்கிலீஸில் வரலாறு பாடத்தை தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், அது கடினமாக இருக்கும் என சிலர் சத்தியராஜிடம் கூறியுள்ளனர். அப்போது அந்த கல்லூரியில் சேரவந்த மணிவண்ணன் சத்தியராஜிடம் பேச்சு கொடுத்துள்ளார். அவர் வேறு கோர்ஸை எடுக்க திட்டமிட்டிருந்தாராம். ஆனால், இதுதான் நல்ல கோர்ஸ் இதுதான் படிக்க சுலபமாக இருக்கும் எனக்கூறி வம்படியாக மணிவண்ணனையும் அந்த கோர்ஸை எடுக்க வைத்துள்ளார் சத்தியராஜ். ஆனால், ஷேக்ஸ்பியர் பாடமெல்லாம் படிக்க முடியாமல் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே கல்லூரி படிப்பை மணிவண்ணன் கைவிட்டுவிட்டாராம்.
அதன்பின் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டார். சத்தியராஜ் சென்னை வந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். மணிவண்ணன் இயக்குனரான பின் சத்தியராஜை 100வது நாள் படத்தில் நடிக்க வைத்து அவரை ரசிகர்களிடம் பிரபலமடைய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாத்ததும் காதலில் விழுந்த மணிவண்ணன்!.. தாடிக்கு பின்னாடி இப்படி ஒரு ரொமான்ஸ்!…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…