சுமாரான ரோலா இருந்தாலும் சூரிக்காக ஓகே சொன்னேன்!.. மண்டாடி கதை இதுதான்!.. சத்யராஜ் சொல்லிட்டாரே!

நடிகர் சூரி நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் நடித்து வந்த நிலையில், வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். அதன் பின்னர், கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2, மாமன் என வரிசையாக பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் அவரது அடுத்த படமான மண்டாடி படத்தின் ஃபஸ்ட் லூக் போஸ்டர் தற்போது வெளியானது.
சூரி காதலுக்கு மரியாதை படத்தில் தொடங்கி பீமா படம் வரை எண்ணற்ற படங்களில் நடித்திருந்தாலும் 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பரோட்டா சூரியாக பிரபலமானார். அதை தொடர்ந்து சூரிக்கு களவானி, ஆடு புலி, வேலாயுதம், போராளி, ஜில்லா, அஞ்சான், அரண்மனை 2 போன்ற பல பட வாய்ப்புகள் கிடைத்தன.
நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரி விடுதலை பாகம் 1 படத்தின் மூலம் கதாநாயகனாக தனது பயனத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி என சில படங்களில் நடித்திருந்தார். மேலும், பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள மாமன் படம் வரும் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதையடுத்தி நடிகர் சூரி மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் நடித்துள்ளார். சத்யராஜ், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடலை பற்றி முழுதாக அறிந்தவர்களை தான் மண்டாடி என்பார்கள். படகு பந்தையத்தை கதைத்தளமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் மதிமாறன்.
மண்டாடி படத்தை பற்றி நடிகர் சத்யராஜ் பேசிய போது, மதிமாறன் மண்டாடி படத்தின் கதையை சொல்ல வந்த போது அப்படத்தின் மேக்கிங் வீடியோவை காமித்தார் பார்த்ததும் பிரம்மித்து போய்விட்டேன், இப்படி ஒரு படகு பந்தயம் ராமேஸ்வரத்தில் நடப்பது யாருக்கும் தெரியாது அதை அலசி ஆராய்ந்து படமாக்க நினைத்தது ரொம்ப பெரிய விஷயம். அதை பார்த்ததும் தன்னுடைய கேரக்டர் சுமாராக இருந்தாலும் நடிக்கலாம் என முடிவெடுத்தேன், அதற்கு பிறகு அவர் கதை மற்றும் கேரக்டரை சொன்னதும் ரொம்ப பிடித்தது, கடினமான உழைப்பில் இன்று ஒரு கதநாயகனாகியிருகும் சூரிக்கும், படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், மண்டாடி படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை இன்று லீலா பேலஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழு வெளியிட்டுள்ளது. சூரியை இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிகர்கள் பார்த்து மிரள போகின்றனர்.