ரஜினியின் மாஸ் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த சத்யராஜ்… காரணம் என்ன தெரியுமா?..

by Arun Prasad |   ( Updated:2023-01-28 13:01:51  )
Sivaji The Boss
X

Sivaji The Boss

கடந்த 2007 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரியா, விவேக், சுமன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சிவாஜி தி பாஸ்”. இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரஜினியின் கேரியரிலேயே மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

Sivaji The Boss

Sivaji The Boss

இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் சத்யராஜ்ஜைத்தான் அணுகினாராம் ஷங்கர். ஆனால் சத்யராஜ் “சிவாஜி தி பாஸ்” திரைப்படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.

இந்த நிலையில் சத்யராஜ் “சிவாஜி தி பாஸ்” திரைப்படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை குறித்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Sathyaraj

Sathyaraj

“ஒரு அலுவலகத்தில் கிளார்க்காக இருந்து மிகவும் கஷ்டப்பட்டு படிபடியாக உயர்ந்து மேல் அதிகாரியாக வளர்ந்த ஒரு நபரை மீண்டும் கிளார்க்காக வேலை செய்யச் சொன்னால் அவர் எப்படி செய்வார். அது போல்தான் இதுவும்.

சத்யராஜ் முதலில் வில்லனாக இருந்து அதன் பின் கதாநாயகனாக உயர்ந்தவர். அவரை அழைத்து மீண்டும் வில்லனாக நடிக்க கூப்பிட்டால் எப்படி. அதுவும் சிவாஜி தி பாஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் என்பது சத்யராஜ் தனது முழு திறமையையும் காட்டக்கூடிய அளவுக்கான கதாப்பாத்திரமாகவா இருந்தது?

Sathyaraj

Sathyaraj

அந்த கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தால் நன்றாகவே நடித்திருப்பார். ஆனால் அந்த கதாப்பாத்திரம் சத்யராஜ்ஜுக்கு சவாலான பாத்திரமாகவே இல்லையே. ஆதலால்தான் சிவாஜி தி பாஸ் திரைப்படத்தில் சத்யராஜ் நடிக்க மறுத்துவிட்டார்” என அந்த வீடியோவில் சித்ரா லட்சுமணன் கூறியிருந்தார்.

Next Story