நடிகர் சத்யராஜ் நான் சாமியை திட்டுவதால் தான் என் மனைவி கோமாவிற்கு சென்றுவிட்டார் என்று கூறியவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பிறகு வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மிகச் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்பவர் நடிகர் சத்யராஜ். இவர் தற்போது வரை சினிமாவில் நடித்து அசத்தி வருகின்றார். ஹீரோவாக இல்லை என்றாலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் ஏகப்பட்ட திரைப்படங்களை தனது கைவசம் வைத்திருக்கின்றார்.
இதையும் படிங்க: டைவர்ஸ் அவங்களுக்கு பரம்பரை வியாதி!.. விவாகரத்துக்கு முக்கிய காரணமே இதுதான்!.. பயில்வான் பளீர்!..
தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இவர் 1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளுக்கு சிபிராஜ் என்கின்ற மகனும், திவ்யா என்கின்ற மகளும் இருக்கிறார்கள்.
சிபிராஜ் தனது தந்தையை போலவே சினிமாவில் நடித்து வருகின்றார். ஆனால் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகின்றார். சத்யராஜின் மகள் சத்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் குறித்து கூறியிருந்தார். தனது தாய் மகேஸ்வரி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதுடன் தனது தந்தை ஒரு சிங்கிள் பேரண்டாக இருந்து தங்களை பார்த்துக் கொள்கின்றார் என்று கூறியிருந்தார்.
இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் நடிகர் சத்யராஜை சிலர் விமர்சனமும் செய்து வந்தார்கள். நடிகர் சத்யராஜை பொறுத்தவரையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மேலும் பெரியாரை பின் தொடர்பவர் என்பதால் கடவுளை திட்டி பல மேடைகளில் பேசியிருக்கின்றார்.
இதனால் தான் அவரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமை அவர் கோமாவிற்கு சென்று விட்டார் என்ற பல கமெண்ட்களை கூறி வந்தார்கள். இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்த சத்யராஜ் இது குறித்து பேசி இருந்தார். அந்த நிகழ்ச்சியை பேட்டி எடுத்த தொகுப்பாளர் உங்கள் மனைவிக்கு இப்படி ஆனதற்கு நீங்கள் கடவுளை திட்டியது தான் காரணம் என்று பலரும் கூறி வருகிறார்கள் என்று கேட்டார்.
இதையும் படிங்க: கங்குவா நெகட்டிவ் விமர்சனத்தால் விஜயை வம்புக்கு இழுக்கும் பிரபல தயாரிப்பாளர்… வெளுக்கும் ரசிகர்கள்…
அதற்கு பதில் அளித்த சத்யராஜ் ‘ஏன் சாமி கும்பிடுகிறவன் வீட்டில் எவனும் சாகவில்லையா? சாமி கும்பிடுவதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. சாமி கும்பிடுகிறவன் வீட்டில் யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போவதில்லையா? இல்லையாரும் சாகவில்லையா? யாருக்கும் ஸ்டோக் வந்ததில்லையா? குடும்பத்தோட கோயிலுக்கு போறவர்களின் வேன் கவிழ்வது இல்லையா? இதுபோல சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை’ என்று சற்று கோபமாக பேசி இருந்தார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…