நடிச்சதுல ரெண்டு படம்தான் என்னோட டேஸ்ட்!.. மத்ததெல்லாம் வேஸ்ட்!.. சத்தியராஜ் ஓப்பன் டாக்!..
கோவையை சேர்ந்த சத்தியராஜ் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னையில் வாய்ப்பு தேடி அலைந்து நடிக்க துவங்கியவர். துவக்கத்தில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வந்து ‘யெஸ் பாஸ்’ என்கிற வசனத்தை மட்டுமே பல படங்களில் பேசியுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக வில்லனாக நடிக்க துவங்கினார். அப்போதுதான் மணிவண்ணனின் நட்பு அவருக்கு கிடைத்தது. அப்படி நூறாவது படத்தில் மொட்டைத்தலை மற்றும் கண்ணாடி அணிந்து அவர் ஏற்ற வில்லன் வேடம் ரசிகளிடம் அவரை நெருக்கமாக்கியது.
அதன்பின் பல படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தார். ஒருகட்டத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கி தனக்கென ரசிகர் கூட்டத்தையும், மார்க்கெட்டையும் உருவாக்கினார். மணிவண்ணன், பி.வாசு ஆகியோர் இயக்கத்தில் வெளிவந்த சத்தியராஜ் படங்கள் வெற்றி பெற்று வசூலில் சக்கை போடு போட்டது. தற்போது வயதாகிவிட்டதால் அப்பா வேடத்தில் நடித்து வருகிறார். ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் இவர் ஏற்ற கட்டப்பா வேடம் சத்தியராஜை பேன் இண்டியா அளவில் ரீச் ஆக்கியது.
இத்தனை படங்கள் மற்றும் வேடங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பிடித்தது சில திரைப்படங்கள்தான் என சத்தியராஜ் பேசியுள்ளார். சமீபத்தில் ஒரு படவிழாவில் பேசிய சத்தியராஜ் ‘இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஆனால், அதில் பெரியார், அமைதிப்படை, கடவுள் போல 5 அல்லது 10 படங்கள்தான் எனது கொள்கைகளுக்கு உட்பட்ட பாத்திரங்கள், மற்றது எல்லாம் கதைக்காக நடித்தது தான்’ என பேசியுள்ளார்.
சத்தியராஜ ஒரு நாத்திகவாதி, முற்போக்கு சிந்தனை உடையவர், பெரியார் மீதும் கம்யூனிஷம் மீதும் ஆர்வம் உள்ளவர், மூடப்பழக்க வழக்கங்களை கிண்டலடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அந்த குறும்படத்துக்கு ஆஸ்கர் கிடைச்சதுதான் பெருமை! – ஆர்.ஆர்.ஆர் படத்தை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்..!