
Cinema News
கவுண்டமணி இல்லனா நான் ஹீரோவே இல்ல!.. பல வருட சீக்ரெட்டை உடைத்த சத்யராஜ்!…
Sathyaraj: கோலிவுட்டில் ஹீரோ ஆகும் ஆசையில் கோவையிலிருந்து சென்னை வந்தவர்தான் சத்யராஜ். இயக்குனர் மணிவண்ணனும், சத்யராஜும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் நண்பர்கள். மணிவண்ணன் இயக்குனராக ஆசைப்பட்டு பாரதிராஜவிடம் போய் சேர சத்யராஜ் சின்ன சின்ன வேடங்களில் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
பல படங்களில் வில்லனின் அடியாட்களில் ஒருவரான யெஸ் பாஸ் என்கிற ஒரு வசனம் மட்டுமே பேசும் நடிகராக வருவார். ஒருகட்டத்தில் கற்பழிப்பு காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ரேப் சீன் என்றாலே சத்யராஜை கூப்பிடு என இயக்குனர்கள் சொல்லுமளவுக்கு முன்னேறினார். நூறாவது நாள் உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக வந்து கலக்கினார்.

Sathyaraj 2
அப்படி நடித்துக் கொண்டிருந்தவரை கடலோரக் கவிதைகள் படம் மூலம் ஹீரோவாக மாற்றினார் பாரதிராஜா. அந்த படம் ஹிட் அடித்தாலும் ஒருபக்கம் வில்லனாகவே நடித்து கொண்டிருந்தார் சத்யராஜ். ஏனெனில், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடித்தால் வாய்ப்புகள் வராது என்பதை புரிந்துகொண்டவர் அவர்.
அதேநேரம், ஒருகட்டத்தில் ஹீரோவாக மட்டுமே நடிக்க துவங்கினார். அப்படி அவர் நடித்த பல படங்களில் அவருடன் கவுண்டமணி இருப்பார். கவுண்டமணியை பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் ரொமான்ஸே செய்வார் சத்யராஜ். ரசிகர்களும் அதை ரசிப்பார்கள். ஒருகட்டத்தில் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடாமல் போகவே குணச்சித்திர நடிகராக மாறினார்.

#image_title
அதன்பின்னரும் சத்தியராஜ் கட்டில் மழைதான். பெரும்பாலான படங்களில் கதாநாயகன் அல்லது கதாநாயகியின் அப்பாவாக நடித்து வருகிறார். 10 படங்கள் வெளியானால் அதில் 3 படங்களில் சத்யராஜ் இருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சத்யராஜ் கவுண்டமணி இல்லையெனில் நான் ஹீரோ இல்லை என பேசியிருக்கிறார்.
கையில் ரோஸ் கொடுத்து நான் காதலிக்க முடியாது. எனவேதான் கவுண்டமணி அண்ணனை பக்கத்தில் வைத்துக்கொள்வேன். ‘நீயெல்லாம் ரொமான்ஸ் பண்றியா?’ என அவர் என்னை கலாய்த்து கொண்டிருப்பார். அப்படித்தான் பல படங்களில் காதலித்தேன். அப்படியே நடித்தே பணம் சம்பாதித்து வீடு, தோட்டமெல்லாம் வாங்கி விட்டேன்’ என ஓப்பனாக பேசியிருக்கிறார்.