எனக்கு நடிப்பே வேண்டாம்ணே!.. சத்யராஜை கதறவிட்ட சிவக்குமார்!. ஒரு பிளாஷ்பேக்!…

by சிவா |   ( Updated:2025-04-08 04:25:58  )
sathyaraj
X

சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமில்லை. திரைத்துறையில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருந்தால் சுலபமாக வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில் அவ்வளவு சீக்கிரத்தில் வாய்ப்பு கிடைத்துவிடாது. சினிமாவில் நுழைய ரெக்கமண்டேஷன் பிடித்தாலும் ‘அதெல்லாம் வேண்டாம் தம்பி.. நிறைய கஷ்டப்படுவீங்க. வேற வேலை எதாவது பாருங்க’ என அறிவுரை சொல்வார்கள்.

பல வருடங்கள் போராடி சினிமாவில் நுழைந்து வாய்ப்பை பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஒருபக்கம் வாரிசு என்பதல் சுலபமாக சினிமாவுக்கு வந்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அப்படி வந்தவர்கள்தான் சினிமாவில் அதிகம். சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, ஜீவா உள்ளிட்ட பல நடிகர்களும் வாரிசுகளாகத்தான் சினிமாவில் நுழைந்தார்கள்.

அதேநேரம் 80களில் கமல்ஹாசன், ரஜினி, விஜயகாந்த், சத்தியராஜ் போன்ற சிலர் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து சினிமாவில் நுழைந்து தங்களுக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்கள். இதில், சத்யராஜ் வாழ்வில் நடந்த ஒரு முக்கிய சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

சத்யராஜ் கோவையை சேர்ந்தவர். ஏற்கனவே கோவையிலிருந்து சினிமாவுக்கு வந்து ஜெயித்தவர் சிவக்குமார். எனவே, அவரை சந்தித்து அவர் மூலம் வாய்ப்பை பெறுவோம் என்கிற நம்பிக்கையில் ஊரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திருக்கிறார் சத்யராஜ். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சத்யராஜ் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

Sathyaraj
Sathyaraj

ஒருமுறை கோயம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. எனவே, அவரை பார்க்க போனேன். தயங்கி தயங்கி நின்ற என்னை அருகில் அழைத்து விசாரித்தார். ‘நான் சினிமாவுக்கு வர ஆசைப்படுகிறேன்.. நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்’ என நான் சொல்ல என் தோளில் கையை போட்டு அப்படியே நடந்து ரயில்வே ஸ்டேஷன் கடைசி வரை கூட்டிப்போனார்.

‘சினிமா உனக்கு வேண்டாம். அதுல இவ்ளோ பிரச்சனை இருக்கு’ என அவர் ஒவ்வொன்றாக என்னிடம் சொல்ல சொல்ல ஒரு கட்டத்தில் ‘எனக்கு சினிமாவே வேண்டாம்ணே’ என சொல்லும் நிலைக்கு போய்விட்டேன்’ என ஜாலியாக பேசியிருக்கிறார். சத்யராஜ் தொடர்ந்து முயற்சி செய்து வில்லனின் அடியாட்களில் ஒருவராக நடித்து அதன்பின் ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து, ஒரு கட்டத்தில் ஹீரோவாக மட்டுமே நடிக்க துவங்கி இப்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story