வில்லனா நடிச்சா மக்களை ஈஸியா ஏமாத்திடலாம்! – சத்யராஜ் சொன்ன சீக்ரெட்…

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக வாய்ப்புகளை பெற்று வந்த நடிகர்களில் சத்யராஜ் முக்கியமானவர். பொதுவாக நட்சத்திரங்கள், அவர்களுக்கு ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தப்பின்பு மீண்டும் வில்லனாக நடிக்க மாட்டார்கள்.
ஆனால் சத்யராஜ் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தபோதும் கூட அமைதி படை திரைப்படத்தில் பெரும் வில்லனாக நடித்திருப்பார். வில்லனாக சத்யராஜ் கலக்கிய திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் அமைதி படை.

ஆனால் அதற்கு பிறகும் கூட அவர் கதாநாயகனாக பல படங்களில் நடித்தார். இப்போதும் தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாமல் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்சமயம் இவர் தீர்க்கத்தரிசி என்கிற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகிற ஜூன் 23 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் அஜ்மல் அமீர் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் தமிழில் ஏற்கனவே அஞ்சாதே, கோ, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சத்யராஜ் சொன்ன ரகசியம்:
ஆனால் அவையாவும் நெகட்டிவ் கதாபாத்திரங்களாக அமைந்தன. இதுக்குறித்து சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறும்போது “ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பது எளிது. அதிலும் மக்களுக்கு ஹீரோவை விட வில்லனை சில சமயம் அதிகமாக பிடிக்கிறது. துவக்கத்தில் வில்லனாக அறிமுகமாகிவிட்டால் மக்கள் நாம் நன்றாக நடிப்பதாக நம்பிவிடுவார்கள்.

பிறகு அதை பயன்படுத்தியே ஹீரோவாகிவிடலாம்” என கூறியுள்ளார். மேலும் “என்னை போலவே அஜ்மல் அமீரும் வில்லனாகவே நடித்து தற்சமயம் கதாநாயகனாகிவுள்ளார். எனவே இவருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும்” என கூறியுள்ளார்.
சத்யராஜ் கூறியது போல அஞ்சாதே, கோ திரைப்படங்களில் அஜ்மல் நடித்த வில்லன் கதாபாத்திரங்களே மக்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கியது.