குடுத்த காசுக்கு மேல கூவுறீங்களே சார்.! உங்கள நாங்க இப்படி எதிர்பார்க்கலயே.!

by Manikandan |
குடுத்த காசுக்கு மேல கூவுறீங்களே சார்.! உங்கள நாங்க இப்படி எதிர்பார்க்கலயே.!
X

முன்பெல்லாம் நடிகர் சத்யராஜை திரையில் பார்த்து ரசிப்பதை விட பொது மேடைகளில் அவரது மேடைப் பேச்சுகள் அவ்வளவு அருமையாக இருக்கும். மேடையில் எந்த பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுகொள்ளாமல் தன் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசுவார். அதையும் யார் மனதும் புண்படாத படி நக்கல் நையாண்டியுடன் நாசுக்காக சொல்லி விடுவார்.

முக்கியமாக அவரது திரைப்படங்களில் அவர் பேசுவது போலவே பொது மேடைகளிலும் பேசுவார். ஆனால் சமீபகாலமாக அந்த சத்யராஜை ரசிகர்கள் காணவில்லை என்று கூறுகிறார்கள்.

ஆம், அண்மையில் நடைபெற்ற எதற்கும் துணிந்தவன் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சத்யராஜ் வழக்கத்திற்கு மாறாக சூர்யாவை மிகவும் புகழ்ந்து பேசினார். மேலும், அவருக்கு புரட்சி நாயகன் எனும் பட்டங்களை கூட வாரி வழங்கினார். அவரது நக்கல் நையாண்டி பேச்சுகள் அந்த இடத்தில் காணாமல் போயின.

இதையும் படியுங்களேன் - நம்ம ராக்கி பாய் கடித்து குதறி வைத்த தமிழ் திரைப்படங்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு.!? மொத்த லிஸ்ட் இதோ…

அதேபோல, நேற்று பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதே ஷியாம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசுகையில் கூட நடிகர் சத்யராஜ், பிரபாஸை மிகவும் புகழ்ந்து பேசினார். அவரது பட வசூல் ஆயிரம் கோடி தாண்டிவிட்டது. இது அதையும் தாண்டும். ராதே ஷியாம் திரைப்படம் ஹாலிவுட் லெவலுக்கு இருக்கிறது. டைட்டானிக் பட வசூலை இந்த படம் முறியடிக்கும் என்று பேசியிருந்தார்.

இது வழக்கமான சத்யராஜ் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது. இதேபோல அண்மையில் நடைபெற்ற ஓர் அரசியல் கூட்டத்தில் கூட சத்யராஜ் அனைவரையும் புகழ்ந்து பேசிவிட்டு வந்து விட்டார். ரசிகர்கள் மீண்டும் அந்த பழைய நக்கல் நையாண்டி சத்யராஜை காண வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story