நான் யானை மாதிரி!.. மண்ணை எடுத்து நானே தலையில போட்டுப்பேன்.. சத்யராஜ் என்ன இப்படி சொல்லிட்டாரு!..

by Saranya M |   ( Updated:2023-11-30 20:30:37  )
நான் யானை மாதிரி!.. மண்ணை எடுத்து நானே தலையில போட்டுப்பேன்.. சத்யராஜ் என்ன இப்படி சொல்லிட்டாரு!..
X

ராஜா ராணி, கனெக்ட் படங்களைத் தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளார் சத்யராஜ். இன்று வெளியாகி உள்ள அன்னபூரணி திரைப்படத்தை இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார்.

அன்னபூரணி படத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் சமையல் கலையைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. மாஸ்டர் செஃப் வேடத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இதையும் படிங்க: கண்ட்ரோல் இருந்தா மட்டும் பாரு!… அழகை தூக்கலாக காட்டி மயக்கும் யாஷிகா….

அன்னபூரணி படத்தின் பிரமோஷனுக்காக சத்யராஜ் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் பங்கேற்ற பேட்டியில் “ நான் ஒரு யானை மாதிரி.. எங்கே மண் இருந்தாலும் அதைக் கிண்டி கிளறி என் தலையில் நானே போட்டுப்பேன்” என சத்யராஜ் பேசியுள்ளார்.

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இரண்டு படங்களை வேண்டாம் என சொல்லிவிட்டேன். அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக மாறின. என் படம் ரெண்டு வாரம் ஓடிச்சு அந்த ரெண்டு படமும் 25 வாரம் ஓடுச்சு.. அப்போ என் வயிறு குபுகுபுன்னு எரிஞ்சுச்சு.. அப்ப கொட்ட ஆரம்பிச்சு முடிதான் மொத்தம் கொட்டி போச்சு என கலாட்டாவாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: நான் எவ்ளோ ரிஸ்க் எடுக்கிறேன் தெரியுமா?.. ஏன் திட்றீங்க?!.. பொங்கும் அட்லீ!..

பல நல்ல படங்களை தவறவிட்ட கதி தான் இப்படி குணச்சித்திர நடிகராக மாறியதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

வரலாறு படத்தில் அஜித்துக்கு டூப் போட பயன்படுத்திய விக்கை மாட்டிக் கொண்டு நடித்தேன். அதன் பின்னர் இந்த படத்தில் தான் விக் வைத்து நடித்திருக்கிறேன் என கே.எஸ். ரவிக்குமாரும் அன்னபூரணி அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Next Story