More
Categories: Cinema History Cinema News latest news

கமல் படத்தில்தான் முதன் முதலாக அதிக சம்பளம் வாங்கினேன்..! நெகிழும் சத்யராஜ்

சத்யராஜ் ஆரம்பகாலகட்டத்தில் கமல், ரஜினி, மோகன் படங்களில் வில்லனாக நடித்தார். அவரது கேரக்டர்கள் எல்லாமே பேசப்பட்டன. அவ்வளவு கெத்தாக நடித்து அசத்தினார். குறிப்பாக காக்கிச்சட்டை படத்தில் அவர் பேசும் ‘தகடு தகடு’ வசனம் இப்போது பார்த்தாலும் செமயாக இருக்கும். விக்ரம் படத்தில் அவர் போட்டு இருக்கும் கூலிங் கிளாஸ் படுமாஸாக இருக்கும்.

இப்படி ஒரு வில்லனா?

Advertising
Advertising

Also read: சத்தமே இல்லாம பட்டையை கிளப்பிய குட் பேட் அக்லி… இதுலயும் விடாமுயற்சிய மிஞ்சிட்டங்களே?!..

ஒரு கண்ணாடியில் கூலிங்கும், இன்னொன்று சாதாரணமாகவும் இருக்கும். கண்ணாடியைத் தூக்கி விடும் வகையிலும் படங்களில் நடித்து அசத்தினார். இப்படி ஒரு வில்லன் நடிகரா என எல்லாருமே ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதனால் சத்யராஜ் படத்தில் நடித்தாலே ரசிகர்கள் வரவேற்பு அதிகமாக இருக்கும்.

மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிக்கு சவால் விடும் வகையில் கெத்தாகவும், ஸ்டைலாகவும் நடித்து இருந்தார். அதில் தான் என்னம்மா கண்ணு பாடல் உள்ளது. மங்கம்மா சபதம் படத்தில் கமலுக்கு டஃப் கொடுப்பார்.

கடலோரக் கவிதைகள்

1986ல் ரசிகன் ஒரு ரசிகை படத்தில் ஹீரோவாக நடித்தார். பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள் படத்தில் இருந்து அவருடைய கதாநாயகன் அந்தஸ்து நாளுக்கு நாள் ஏறியது. இந்தப் படத்தில் டீச்சராக வரும் ரேகாவை அப்பாவித்தனமாக காதலிக்கும்போது சத்யராஜிக்குள் இப்படி ஒரு நடிகரா என்று நம்மையே வியக்க வைத்து இருந்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த அவருக்கு அண்ணா நகர் முதல் தெரு, அமைதிப்படை, வில்லாதி வில்லன் படங்கள் மாஸாக இருந்தன.

கூலி

sathyaraj

இப்போது கூட லோகேஷ்கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இப்போது சத்யராஜ் ஒரு நெகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

Also read: உருட்டுனா இப்படிதான்… டிஆர்பியில் செம அடி வாங்கிய விஜய்… சீன் காட்டும் சன்டிவி

எனக்கு ரொம்ப ஆச்சரியமான சம்பளம் ஜப்பானில் கல்யாண ராமன் படத்துக்குத் தான் வாங்குனேன். நான் வில்லனா நடிக்கும்போது 15 ஆயிரம் தான் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். ஆனா ஜப்பானில் கல்யாணராமன் படத்துக்கு பஞ்சு அருணாசலம் எனக்கு 1 லட்சம் சம்பளம் கொடுத்தாரு என்கிறார் சத்யராஜ்.

Published by
sankaran v

Recent Posts