நிச்சயமா இந்தப்படம் கமல் படத்தோட பேரைக் காப்பாத்தும் - சத்யராஜ்

Sathyaraj
உங்கள் சத்யராஜ் என்று ஒரு காலத்தில் தமிழ்த்திரை உலகில் செல்லமாக அழைக்கப்பட்டார். தன்னோட தனித்துவமான மேனரிசம் மற்றும் வில்லத்தனமான நடிப்பால் திரை உலகில் கொடிகட்டிப் பறந்தார். கமல், ரஜினி படங்களில் பிரதான வில்லனாகத் தோன்றி ரசிகர்கள் மத்தியில் கைதட்டல்களைப் பெற்றார். தன்னோட மகன் சிபியின் நடிப்பில் உருவான சத்யா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசினார்.
சிபி பிரமாதமா பேசிட்டாரு. இனி அவர் நேரா ஆர்.கே.நகருக்குப் போயிடலாம்னு நினைக்கிறேன். மணி அண்ணன் நீங்களே சொல்லுங்க...ஏன்னா எல்லோரையும் பாராட்டி தெள்ளத் தெளிவா பேசிட்டாரு. கைவசம் ஒரு தொழில் இருக்கு. நல்லா வயசாகட்டும்...ஒண்ணும் அவசரம் இல்ல.

Sathya 2
அதுக்காக வயசான நடிகர்கள் தான் ....அய்யோ... சின்ன வயசுலயும் அரசியலுக்கு வரலாம். என்னோட குரு புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் சின்ன வயசுல தான் அரசியலுக்கு வந்தார். அதாவது 1953ல அவரோட 35வது வயசுல வந்தார். 1917 ல அவர் பிறந்தாரு. தலைவரைப் பற்றி அத்தனை டிப்ஸயும் பிங்கர் டிப்ஸ்ல வச்சிருப்பேன்.
முதல்ல சனம் படத்தை (தெலுங்கு) வந்து என்னோட மனைவியும் மகள் திவ்யாவும் தான் படத்தைப் பார்த்துட்டு இந்த படம் ரொம்ப பிரமாதமா இருக்கு. அவங்களுக்கு தெலுங்கே தெரியாது. ஒரு மொழியே தெரியாம இந்தப் படம் இவ்ளோ நல்லாருக்கு. நிச்சயமா வாங்கிப் பண்ணலாம்னு என் பொண்ணு திவ்யா தான் சொன்னா. அப்போ சிபி இதுபற்றி சொன்னாரு.
அப்போ நான் பாகுபலி நடிச்சிக்கிட்டு இருக்குறேன். சனம்னு ஒரு தெலுங்கு படம் இருக்கு. அதைப் பற்றி விசாரிங்கன்னு சொன்னார். அப்போ பிரபாஸ் கூட சூட்டிங். பிரபாஸ் சனம்னு ஒரு படம் வந்துருக்கா...ன்னு கேட்டேன். சூப்பர் படம் சார்...பிரமாதமா இருக்கும். ஏன்னு கேட்டாரு. இல்ல சார் சிபி நடிக்கறதுக்காகத் தான் கேட்டாரு. கண்டிப்பா வாங்கிப் பண்ணுங்க சார்...ரொம்ப நல்லாருக்கும்னு சொன்னாரு.
ஏன்னா ஒரு பெரிய ஹீரோ பண்ணாம அந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் தான் ஹீரோ. அந்தப் படத்தில ஹீரோயின் கேரக்டர் ரம்யா நம்பீசனுக்குத் தான் கரெக்டா இருந்தது. ரைட்ஸ் வாங்கி சூட்டிங் ஆரம்பிச்சி 10 நாள் சூட்டிங் நடந்ததுக்கு அப்புறமாகத் தான் நான் சனம் படத்தை பார்த்தேன்.
இன்னும் சொல்லப்போனா இந்தப்படத்துல ஆர்ட்டிஸ்ட் காம்பினேஷன் பிரமாதமா இருந்தது. அதே மாதிரி வரலட்சுமி சரத்குமார் நடிச்சிருந்த கேரக்டரை பிரமாதம்...அவங்க மட்டும் தான் செய்ய முடியும்...
இந்தப்படத்துல டைட்டில் சத்யா கிடைச்சதுக்கு நான் கமல் சாருக்கு ரொம்ப தேங்க் பண்றேன். சிபி வந்து சத்யான்னு பேரு வச்சா நல்லாருக்கும்னாரு. எனக்கு வந்து ஒரு ஆப்லிகேஷனா போறது ரொம்ப முடியாத விஷயம். கமல் சார் வந்து எனக்கு ரொம்ப பிரண்டு. என்னோட பர்ஸ்ட் படம் கமல் சாரோட சட்டம் என் கையில். 1978ல் வந்தது. அதுக்கு அப்புறம் அவரு என்னை வச்சி கடமை கண்ணியம் கட்டுப்பாடு படம் எடுத்தாரு.
சத்யா படத்துல கமல் எவ்ளோ இன்வால்வ நடிச்சிருப்பாரு. இந்தப் படத்திற்காக கமல் சார் ரொம்ப மெனக்கிட்டிருப்பாரு. சத்யாங்கறது ரொம்ப வித்தியாசமான படம். அப்போ ஒரு வழக்கமான ஹீரோயிசம் இல்லாம இளைஞர்கள் எந்த அளவுக்கு ஒரு சமுதாயத்தை எதிர்த்துப் போராட முடியுமோ...அந்த அளவுக்கு தான் அந்தப் படம் இருக்கும். கமல் சார் அவ்ளோ பிரமாதமா பண்ணிருப்பாரு.
இப்ப வந்து இந்த டைட்டில் கொடுத்தது ரெண்டு ஜெனரேஷனுமே கொண்டாடுது. சூர்யா வந்து டிரெய்லர் ரிலீஸ் பண்ணிருக்காரு. எல்லாரும் ரொம்ப நல்லா ஒர்க் பண்ணிருக்காங்க. சத்யாங்கற டைட்டில காப்பாத்துற அளவுக்கு இந்தப்படம் வந்துருக்குங்கற நம்பிக்கை இருக்கு.