Connect with us
satfe

Cinema History

அசால்ட் பண்ணி அடிச்சி தூக்கிய சத்யராஜ்!.. அசந்து போன விஜயகாந்த்!. அப்படி என்னதான் நடந்துச்சு?.

தமிழ் சினிமாவில் வில்லனாக தோன்றி, கதாநாயகனாக அடுத்த ரவுண்டு வந்து, இன்று குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் சத்யராஜ். ரஜினி, கமலுடன் பேர் சொல்லும் படங்கள். அஜீத், விஜய்க்கு இணையான வேஷங்கள், இப்படி எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி பண்ணக்கூடிய கதாபாத்திரங்களிலும் தெறிக்க விட்டவர் இவர்.

“மிஸ்டர் பாரத்” ரஜினியுடன் இவர் நடித்த படம் செம ஹிட்டானது. இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நடக்குற மோதல்தான் படமே. மோதுறது தன்னோட மகன் கூடத்தான்னு கிளைமாக்ஸ் காட்சி வரைக்கும் தெரியாமலே இருப்பாரு சத்யராஜ். பையனா ரஜினி ஸ்டைலயும், நடிப்பிலேயும் கலக்கிருப்பாரு. இந்த படத்தில் இடம் பெற்ற ‘என்னம்மா கண்ணு செளக்கியமா’ பாடல் இன்றும் ஃபேமஸ்.

கமல் கூட “விக்ரம்”, கொள்ளைக்கூட்ட தலைவன். இந்த படத்துல இவர் பேசின “தகடு”, “தகடு” அப்படீங்கிற வசனம் பம்பரம் மாதிரி சுத்தி, சுத்தி வந்துச்சு தமிழ்நாடு ஃபுல்லா அந்த நேரத்துல. வெறி கொண்ட வில்லனா நடிச்ச இவரு அன்பான ஆக்ரோஷமான, அமைதியான ஹீரோவாவும் நடிச்சிருக்காரு. பல படங்களில் நக்கல் கலந்த நடிப்பு இவரோட “ஸ்பெஸாலிட்டி”.

sat

sat

அஜீத் கூட ‘பகைவன்’ங்குற படம். ஆரம்பத்தில் எதிர்மறையான கதாப்பாத்திரமா தெரிஞ்சாலும் படம் நகர, நகர இவரோட அந்த ரோல் எவ்வளவு முக்கியத்துவமானதுன்னு ரசிகர்களை சொல்ல வைத்திருக்கும். சத்யராஜ்கிட்ட அடி வாங்குற மாதிரி கதாப்பாத்திரம் நம்ம “தல” க்கு. அப்போ இவரை விட சத்யராஜ் தமிழ் சினிமாவில பெரிய நடிகரா வலம் வந்தாரு ஹீரோக்கள்ல.

விஜய் கூட ‘நண்பன்’ வித்தியாசமான தோற்றத்துல வசி செஞ்சிருப்பாரு.. இவருக்கு கொடுத்த ‘விருமாண்டி சந்தானம்’ கேரக்டர்ல. படம் முழுக்க ஒரே ‘கலாய்’ தான் . இப்படி நடிப்பில தனக்குன ஒரு ஃபார்முல வச்சிட்டு வரும் சத்யராஜ் சினிமா கேரியர்ல முக்கியமான படம் அப்டீன்னு பார்த்த அது ‘நூறாவது நாள்”.

நல்ல “வழு வழு” ன்னு ஒரு மொட்டையை படம் ஃபுல்லா போட்டுக்கிட்டு , கருப்பு கூலிங்கிளாசையும் மாட்டிக்கிட்டு இவர் காட்டிய வில்லத்தனத்தை பார்த்து ரசிகர்கள்லாம் தியேட்டர்ல பயந்து போனாங்களாம். மோகன், நளினி கூட முக்கிய கதாப்பாதிரத்தில நடிச்சிருப்பாங்க. இந்த படத்துல. கூடவே நம்ம மறைந்த புரட்சி கலைஞர் கேப்டன் கூட ரொம்ப, ரொம்ப முக்கியமான ஒரு கேரக்டர்ல நடிச்சிருந்தார்.

இந்த படத்தை பற்றி ஒரு மேடையில பேசசிய விஜயகாந்த் ‘என்னதான் நான், மோகன்லாம் நடிச்சிருந்தாலும் எங்களையெல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி தான் இவரோட நடிப்பு இருந்துச்சி’ன்னு ஒபனா சொல்லியிருந்தாரு. இவரு வருகிற சீன்ல எங்களுக்கு கிடைத்த கைத்தட்டலை விட இவருக்கு தான் அதிகம்னு தன்னடக்கத்தோட சொல்லி இருப்பாரு விஜயகாந்த். நான் இவரோட கெட்டப்ப ஷூட்டிங் ஸ்பாட்ல பார்க்கும் போதே அசந்து போய்ட்டேன்னு வேற சொன்னார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top