இதனால்தான் ரஜினியுடன் நடிக்க மாட்டேன் என சொன்னேன்!.. ஃபுல்ஸ்டாப் வைத்த கட்டப்பா!...

by சிவா |   ( Updated:2024-06-07 10:28:43  )
rajini
X

நடிகர் சத்தியராஜ் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தபோது பெரிய நடிகராக இருந்தவர் ரஜினி. சத்தியராஜுக்கு ஹீரோ வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, வில்லனின் அடியாட்களில் ஒருவராக பல படங்களிலும் நடித்தார். ரஜினியிடம் அடி வாங்கி கீழே விழும் நடிகராக பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கொஞ்சம் புரமோஷன் ஆகி கதாநாயகனின் தங்கையை கற்பழிக்கும் காட்சிகளில் நடிக்கும் நடிகராக புரமோஷன் ஆனார் சத்தியராஜ். நான் சிகப்பு மனிதன் படத்தில் கூட ரஜினியின் தங்கையை கற்பழிக்கும் காட்சியில் சத்தியராஜ் நடித்தார். மணிவண்ணன் கைவண்ணத்தால் சத்தியராஜின் கிராப் சினிமாவில் ஏறியது.

இதையும் படிங்க: மோகனின் முதல் படப்பிடிப்பு அனுபவமே இவ்ளோ ஜல்சாவா? ரொம்ப கொடுத்து வச்சவரு போல..!

அவர் சொல்லிக்கொடுத்த ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே’ போன்ற வசனங்களை பேசித்தான் சத்தியராஜ் ரசிகர்களிடம் பிரபலமானார். மூன்று முகம், மிஸ்டர் பாரத், பாயும் புலி, நான் சிகப்பு மனிதன், நான் மகான் அல்ல என பல படங்களிலும் ரஜினியுடன் நடித்த சத்தியராஜ் ஒரு கட்டத்தில் ரஜினியுடன் நடிப்பதை தவிர்த்தார்.

rajini

அதோடு, பொதுமேடையிலேயே ரஜினியை கடுமையாக விமர்சிக்கவும் துவங்கினார் சத்தியராஜ். சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க ஷங்கர் கேட்டப்போது ‘ என் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பரா?’ என சத்தியராஜ் கேட்டதாகவும் ஒரு செய்தி உண்டு. அதன்பின்னரும் சில படங்களில் கேட்டபோது ரஜினியுடன் நடிக்க மறுத்தார் சத்தியராஜ்.

இதையும் படிங்க: கோபப்பட்ட இயக்குனர்!.. கமல் கொடுத்த அட்வைஸ்!.. கடைசி வரை ஃபாலோ பண்ணிய மைக் மோகன்!..

ஆனால், இப்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள கூலி படத்தில் சத்தியராஜ் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் சத்தியராஜிடம் ‘ரஜினியுடன் நடிக்க மாட்டேன் என நீங்கள் தொடர்ந்து சொல்லி வந்ததாக ஒரு செய்தி உண்டு. அதற்கு உங்கள் பதில் என்ன?’ என கேட்கப்பட்டது.

அதற்கு பதில் சொன்ன சத்தியராஜ் ‘சிவாஜி படத்தில் என்னை கேட்டார் ஷங்கர். ஆனால், அதில் எனக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிக்கு சமமாக ‘என்னம்மா கண்ணு சவுக்கியமா?’ என பாட்டெல்லாம் பாடுவேன். இதில் எனக்கு ஒன்றுமில்லை’ என சொல்லி மறுத்தேன். அதேபோல், எந்திரன் படத்தில் வில்லன் வேடம் வந்தது. அதிலும், எனக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை’ இதனால்தான் நடிக்க மறுத்தேன்’ என சொல்லியிருக்கிறார் கட்டப்பா.

Next Story