மணிவண்ணனின் ஒரு பெரிய ஆசை!.. மறைவிற்கு பின் நிறைவேற்றிய சத்யராஜ்..
தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக வாழ்ந்து வந்தவர் நடிகர் மணிவண்ணன். பகுத்தறிவு கொண்ட அனைவராலும் தோழர் என உணரப்பட்ட ஒரு அற்புதமான மனிதர். உயர் ஜாதி, மேல் ஜாதி என பார்வையாளர்களை மையப்படுத்திய திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த 80களில் வேலை இல்லா திண்டாட்டம் ,தொழிலாளர் பிரச்சினைகளை மையப்படுத்தி திரைப்படங்கள் வருவதற்கு காரணமாக இருந்தவர் மணிவண்ணன்.
50 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் .கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஒரு பொதுவுடமை அரசியலுடன் திராவிட இயக்க ஆளுமைகளுடனும் தொடர்பு கொண்ட மனிதராக மணிவண்ணன் தன்னை எப்பொழுதுமே காட்டிக் கொள்வார்.
மணிவண்ணனை மிகவும் அறியப்பட்ட படமாக அமைந்தது அமைதிப்படை திரைப்படம் .அந்த படத்தில் அவர் இயக்குனராக இருந்தாலும் நடிகராகவும் சத்யராஜுடன் இணைந்து நடித்த அவருடைய காட்சிகள் மிகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சத்யராஜும் மணிவண்ணனும் கல்லூரி தோழர்களாகவே தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சத்யராஜும் மணிவண்ணனும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள் .அதன்பிறகு சினிமாவில் சத்யராஜ் நுழைந்த பிறகு தான் இருவருக்கும் உள்ள நட்பு இன்னும் மேலோங்கி சிறப்பித்தது. மேலும் மணிவண்ணன் ஈழத்தில் தமிழர்கள் அவதிப்படும் நிலையை அறிந்து போராட்டங்களில் ஈடுபட்டு தன் குரலை உயர்த்தினார்.
ஈழத் தமிழ் மக்களுக்காக எந்நேரமும் குரல் கொடுப்பவராக சினிமாவில் மணிவண்ணன் கருதப்பட்டார். அதனாலேயே தன்னுடைய மகனுக்கும் ஈழத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என எண்ணினாராம். அதற்குள் மணிவண்ணன் இறந்த விட அவருடைய ஆசையை நிறைவேற்றினார் சத்யராஜ்.
இதையும் படிங்க : விஜயசாந்தியை காப்பாற்ற போய் வாழ்க்கையை தொலைத்த மணிவண்ணன்!.. அப்புறம் நடந்த சம்பவம்தான் வேற லெவல்..
மணிவண்ணனின் இறப்பிற்குப் பிறகு அவருடைய குடும்பத்திற்கு ஒரு முழு ஆதரவாக இருந்து வந்தாராம் சத்தியராஜ் .அவரின் ஆசைப்படி மணிவண்ணனின் மகனுக்கு ஈழ தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்தாராம் சத்யராஜ். இந்த தகவலை மூத்த பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியின் போது கூறினார்.