Categories: Cinema History Cinema News latest news

செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இருந்துச்சு..- பிரபல இயக்குனரின் தவறை உணர்த்திய சத்யராஜ்!

கோலிவுட் நடிகர்களில் நடிகர் கவுண்டமணிக்கு பிறகு யாரை பார்த்தாலும் முகத்திற்கு நேராக அவர்களது தவறை சொல்லக்கூடியவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் தனது திரைப்படங்களிலேயே குசும்பான கதாபாத்திரமாகதான் அதிகமாக நடித்திருப்பார்.

ஏனெனில் நிஜ வாழ்க்கையிலும் அவர் அப்படியான ஒரு குணம் கொண்டவர்தான். சினிமா துறையில் உள்ள பல பிரபலங்களே இந்த விஷயத்தை கூறியுள்ளனர்.

தமிழில் பல நடிகர்களுடன் பல்வேறு கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்துள்ளார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவார் நடிகர் சத்யராஜ்.

பாகுபலி படத்தில் வரும் சீரியஸான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி. மற்ற படங்களில் வரும் சிரிப்பு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, அந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடிக்க கூடியவர் சத்யராஜ்.

2010 ஆம் ஆண்டு சுந்தர் சி மற்றும் சத்யராஜ் நடித்து குரு சிஷ்யன் என்கிற திரைப்படம் வெளியானது. முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் இந்த படம் தயாரானது. இயக்குனர் சக்தி சிதம்பரம் இந்த படத்தை இயக்கினார். சுந்தர் சியை நேரில் சந்தித்த இயக்குனர் அவரிடம் கதையை கூறினார்.

சத்யராஜின் சொன்ன அந்த வார்த்தை

அதை கேட்ட சுந்தர் சி மற்றொரு கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என கேட்க சத்யராஜுடம் கேட்கலாம் என உள்ளேன் என்று இயக்குனர் கூறியுள்ளார். சத்யராஜ் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என முடிவு செய்த சுந்தர் சி, சத்யராஜிடம் அவரே பரிந்துரைத்து அந்த இயக்குனரை அனுப்பி வைத்தார்.

Sundar C

அடுத்த நாள் சத்யராஜை சந்தித்த சுந்தர் சி “என்ன சார் கதை நல்லாயிருந்துச்சா?” எனக் கேட்டுள்ளார். நல்லா இருந்துச்சு சுந்தர், ஆனால் அந்த பையன் ஸ்க்ரிப்ட்டை பார்த்து பார்த்து கதையை சொல்கிறான் என கூறியுள்ளார். அதுனால என்ன சார் என சுந்தர் சி கேட்டுள்ளார்.

இல்ல அவனோட கதை! அது அவனுக்கே நியாபகம் இல்லாம ஸ்க்ரிப்ட பார்த்து சொல்லலாமா? என கூறியுள்ளார். இதுக்குறித்து சுந்தர் சி கூறும்போது “சத்யராஜ் அப்படி சொன்னது எனக்கு செருப்பால் அடிச்ச மாதிரி இருந்துச்சு. இது ஒரு தப்புன்னு எனக்கு தெரியவே இல்லை. ஆனால் சத்யராஜ் கூறியது சரிதான்” எனக் கூறியுள்ளார்.

Published by
Rajkumar