அவர் மட்டும் தான் விக் வச்சிட்டு வருவாரா?.. நான் வைக்கிறேன் பாரு பெரிய விக்!.. சத்யராஜ் அலப்பறை!..

நடிகர் சத்யராஜின் புதிய லுக்கை பார்த்து சினிமா வட்டாரமே ஆடிப் போயுள்ளது. அந்தளவுக்கு தெறி மாஸான லுக்கில் சத்யராஜ் சக்கைப் போடு போடுகிறார். பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் விக் வைக்காமல் மொட்டை தலையுடன் நடித்திருந்தார். வழுக்கை தலையுடன் இருக்கும் சத்யராஜ் பல படங்களில் சூப்பராக விக் வைத்துக் கொண்டு நடித்து வருகிறார்.

விஜய் நடித்த நண்பன், இந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜியுடன் நடித்த சிங்கப்பூர் சலூன் மற்றும் சமீபத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்த வெப்பன் உள்ளிட்ட படங்களில் வித விதமான விக்குகளையும் வைத்து அவர் நடித்துள்ளார். இந்நிலையில், அடுத்ததாக புதிய லுக்கிற்கு சத்யராஜ் மாறிய நிலையில், கூலி படத்துக்கான கெட்டப் தான் என ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை சுட்ட துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கா?!.. நீதிபதி கேட்ட பதில்!. எம்.ஆர்.ராதா சொன்ன நச் பதில்!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி திரைப்படம் இன்னும் ஒரு வாரத்தில் ஷூட்டிங் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு பக்கம் வேட்டையன் டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து 35 நாட்கள் ரஜினிகாந்த் கூலி படத்துக்காக கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

வேட்டையன் டப்பிங்கிற்காக நடுவே சில நாட்கள் சென்னைக்கு வந்து செல்வார் என்று கூறப்படுகிறது. கூலி படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் தான் நடைபெற போகிறதாம். இந்நிலையில், சத்யராஜ் புதிய விக்குடன் டான் லுக்கில் செம ஹேண்ட்ஸமாக உள்ள போட்டோ ஒன்று லீக் ஆகியுள்ளது. சமீபத்தில், ரஜினிகாந்தின் கூலி லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நிலையில், இந்த போட்டோவும் வெளியே வந்து வைரலாகி வருகிறது. ஆனால், இது அந்த படத்துக்கானதா? அல்லது வேறு படத்துக்கான லுக்கா என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் ரொம்ப பிஸி!.. அட்லீயோட அடுத்த டார்கெட் யாரு தெரியுமா?.. இந்த காம்போ செமயா இருக்கே!..

மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்துக்கு அப்பாவாக நடித்த சத்யராஜ் பல வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினிகாந்த் உடன் கூலி படத்தில் வில்லனாக மிரட்ட காத்திருக்கிறார். இருவரது ஃபேஸ் ஆஃப் செம்மையாக இருக்கும் என்றும் லோகேஷ் கனகராஜ் லியோவில் விட்டதை கூலியில் பிடித்து விடுவார் என்றும் கூறுகின்றனர்.

அந்த பெண்டிங்கில் உள்ள எல்சியூவையும் லோகேஷ் கம்ப்ளீட் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடர்ந்து 10 மணி நேரம் விஜயால் எப்படி நிற்க முடிந்தது? காரணத்தை சொன்ன தயாரிப்பாளர்

 

Related Articles

Next Story