Home > Cinema News > இதுதான் ஒரிஜினல் அரபிக்குத்து!...பாலைவனத்தில் செம குத்து குத்திய ரசிகர்கள்(வீடியோ)....
இதுதான் ஒரிஜினல் அரபிக்குத்து!...பாலைவனத்தில் செம குத்து குத்திய ரசிகர்கள்(வீடியோ)....
X
விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இந்த பாடல் வீடியோ விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி சமூகவலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சவுதி அரேபியவில் வசிக்கும் ரசிகர்கள் சிலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.
Next Story