மீண்டும் 'அண்ணாத்த' கூட்டணி? என்ன சொல்கிறார் சவுந்தர்யா..!!

by ராம் சுதன் |   ( Updated:2021-10-31 05:23:42  )
rajini with soundarya
X

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்தான் 'அண்ணாத்த'. இப்படம் தீபாவளி வெளியீடாக வரும் 4ம் தேதி திரைக்கு வரவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினி நீண்ட இடைவேளைக்குப் பின் இப்படத்தின்மூலம் கிராமத்து கதையில் நடித்துள்ளார். டிரைலரைப் பார்க்கும்போதே தெரிகிறது கண்டிப்பாக இது ஒரு மாஸ் மசாலாப்படமாக இருக்கும் என்று. அண்ணன் - தங்கை சென்டிமென்டில் இப்படம் உருவாகியுள்ளதால் இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

annaatthe movie

annaatthe movie

அதுமட்டுமல்லாமல், தற்போது நவம்பர் 1 முதல் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இப்படம் கண்டிப்பாக வசூலில் ஒரு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ரஜினி தனது மகள்கள் மற்றும் பேரன்களுடன் இப்படத்தை பார்த்தார். படத்தைப்பார்த்தபின் பேசிய சவுந்தர்யா, 'அண்ணாத்த படத்திற்குப்பின் மீண்டும் ரஜினி, சிவா இணையவேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

மேலும், படம் பார்த்துட்டு வெளியே வந்து, உங்க கைய பிடிச்சுட்டு கண்ணுல தண்ணியோட நின்னு, நீங்க பண்ணுனது மேஜிக் இல்லை.. அதை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. தலைவரோட வெறித்தனமான ஒரு ரசிகையாகவும், அப்பாவின் மகளாகவும், நீங்க அப்பாவை பார்த்துக்கிட்டே முறையைவச்சு சொல்றேன், அண்ணாத்த டீம் மீண்டும் இணையனும் , என்றார்.

rajini-siva

rajini-siva

ஆனால், இதுகுறித்து ரஜினியும், சிவாவும் எந்த ஒரு பதிலும் கூறவில்லை. மீண்டும் அவர்கள் இணைவதற்கு கூட சாத்தியம் உள்ளதாக கூறுகிறார்கள். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் மீனா குஷ்பூ சூரி சதீஷ் ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story