அடேங்கப்பா!. இத்தனை நடிகைகளுக்கும் டப்பிங் கொடுத்தது இவரா? தெரியாம போச்சே!..
தமிழ்ப்பட உலகில் ரோகிணி, ரவீனா ரவி, சின்மயி, தீபாவெங்கட், ஸ்ரீஜா ரவி என பலர் டப்பிங் ஆர்டிஸ்டாக உள்ளனர். இவர்களது குரலில் தான் ரம்பா, சிம்ரன், ஜோதிகா, ஷாலினி, தேவயாணி, நயன்தாரா, அனுஷ்கா என தமிழ்சினிமா உலகின் முன்னணி கதாநாயகிகள் எல்லோரும் நடித்து வந்தனர்.
அந்த வகையில் ஒரு சிலரது குரல் தான் குறிப்பிட்ட கதாநாயகிகளுக்குப் பொருத்தமாக இருக்கும். ஆனால் இந்த டப்பிங் ஆர்டிஸ்ட்டோட வாய்ஸ் எல்லா நடிகைகளுக்கும் கனகச்சிதமாகப் பொருந்தும் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட திறமைக்காரர் என்பதை நீங்களே கண்டுகொள்ளுங்கள். யார் அந்த மாயாஜால டப்பிங் ஆர்டிஸ்ட் என்று பார்ப்போமா...
சவீதா ராதாகிருஷ்ணன். இவரது மற்றொரு பெயர் சவீதா ரெட்டி. பல வருடங்களாக பல முன்னணி கதாநாயகிகளின் குரலாக உள்ளவர். அப்படி எந்தெந்தப் படங்களில் இவர் யார் யாருக்கெல்லாம் குரல் கொடுத்துள்ளார் என்று பார்க்கலாம். ஜீன்ஸ் மற்றும் எந்திரன் படத்திற்காக நடிகை ஐஸ்வர்யாராய்க்குக் குரல் கொடுத்து அசத்தியுள்ளார்.
அதேபோல விஐபி, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் ஆகிய படங்களுக்காக நடிகை சிம்ரனுக்குக் குரல் கொடுத்துள்ளார்.
நடிகை ஜோதிகாவுக்கு பூவெல்லாம் கேட்டு பார், முகவரி முதல் 36 வயதினிலே வரையிலான எல்லா படங்களுக்கும் வாய்ஸ் கொடுத்து அசத்தியுள்ளார். அதே போல திரிஷாவுக்கு மவுனம் பேசியதே, சாமி முதல் பீமா வரை டப்பிங் கொடுத்துள்ளார். நயன்தாராவுக்கு ஈ முதல் நண்பேன்டா வரை டப்பிங் இவர் தான்.
ஹன்சிகா நடித்த மாப்பிள்ளை முதல் குலேபகாவலி வரையும், லைலா நடிப்பில் பார்த்தேன் ரசித்தேன் முதல் கண்ட நாள் முதல் வரையிலும், சினேகா நடிப்பில் வசீகரா முதல் பள்ளிக்கூடம் வரையிலும் டப்பிங் கொடுத்தவர் இவரே தான்.
மிஷ்கின் இயக்கி சைக்கோ படத்தில் அதீதி ராவ் ஹைதாரிக்கு டப்பிங் கொடுத்தார். அமலா பாலுக்கு தெய்வத்திருமகள் படத்திற்கும், ரெஜினாவுக்கு ராஜதந்திரம் படத்திற்கும், தீபிகாவுக்கு பத்மாவதி படத்திற்கும், சதாவுக்கு ஜெயம் படத்திற்கும், ஜெனிலியாவுக்கு சந்தோஷ் சுப்பிரமணியம் படத்திற்காகவும், சவுந்தர்யாவுக்கு காதலா காதலா மற்றும் படையப்பா படத்திற்கும், அபிதாவுக்கு சேது படத்திற்கும், கோபிகாவுக்கு எம்.மகன் படத்திற்கும் டப்பிங் கொடுத்து அசத்தியவர் இந்த சவீதா ராதாகிருஷ்ணன் தான்.
ஒரே நபர் இத்தனை விதமான நடிகைகளுக்கும் குரல் கொடுத்துள்ளார் என்றால் அது பெரிய விஷயம்தான்.