இந்த படம் மட்டும் வரலைன்னா சாவித்திரி லெவலே வேற… எல்லாம் விதிதான் போல!!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாகவும் நடிகையர் திலகமாகவும் திகழ்ந்த சாவித்திரி, அவரது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் எப்படிப்பட்ட நிலைக்கு சென்றார் என்பதை நாம் பலரும் அறிவோம். அப்படி ஒரு துக்ககரமான நிலைக்கு அவரை தள்ளியதற்கு முதல் காரணமாக இருந்தது அவர் இயக்கிய ஒரு திரைப்படம்தானாம்.
1964 ஆம் ஆண்டு ‘மூக மனசுலு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார் சாவித்திரி. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை “பிராப்தம்” என்ற பெயரில் தமிழில் தயாரித்து இயக்க முடிவு செய்தார் சாவித்திரி. ஆனால் சாவித்திரியின் கணவரான ஜெமினி கணேசனுக்கு இதில் விருப்பம் இல்லாமல் போனது.
“பிராப்தம்” திரைப்படத்தில் தனது கணவரான ஜெமினி கணேசனை கதாநாயகராக நடிக்க வைக்க வேண்டும் என விரும்பினார் சாவித்திரி. இத்திரைப்படத்தை சாவித்திரி உருவாக்குவதற்கே ஒப்புக்கொள்ளாத ஜெமினி, சாவித்திரி நடிக்குமாறு கூறியபோது மறுத்துவிட்டார். ஆதலால் இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்கவும், சாவித்திரியே கதாநாயகியாக நடிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் சாவித்திரிக்கும் ஜெமினி கணேசனுக்கும் கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்ததாம். அந்த வாக்குவாதத்தால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்த நிகழ்வை குறித்து தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியபோது “சாவித்திரி என்ற அற்புதமான நடிகையின் வாழ்க்கையில் மிகப்பெரிய புயல் வீச காரணமாக இருந்தது இருந்தது பிராப்தம் என்ற திரைப்படதான்” என இத்தகவலை பகிர்ந்து கொண்டார். ஒரு வேளை “பிராப்தம்” திரைப்படத்தை அவர் உருவாக்கவில்லை என்றால் சாவித்திரியின் வாழ்க்கையே வேறு மாதிரியாக இருந்துருக்குமோ??