ஒவ்வொரு நாளும் போராட்டம் தான்!.. இளையராஜாவிடம் மாட்டிக் கொண்டு முழித்த எஸ்.பி.பி!..

sbp
தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவான்களில் குறிப்பிடத்தக்கவர் இளையராஜா. இவரின் சினிமா பயணம் தொடங்கி இன்று வரை இவரின் வெற்றி அளப்பரியாது. எத்தனை விருதுகள், எத்தனை கௌரவங்கள் என இளையராஜாவை அடைந்த வெற்றிகளை சொல்லி முடியாது.
இவரின் இசையில் அமைந்த பாடல்கள் அந்த அளவுக்கு வரவேற்பை பெற்றது என்றால் அதற்கு மற்றொரு காரணம் எஸ்.பி.பி. இளையராஜா இசை, எஸ்.பி.பி குரல் என அந்த பாடலே ஒரு தேன் வந்து பாய்வது போல அனைவரின் நெஞ்சத்திலும் ஆழமாக பதிந்தது.

sbp1
இருவரும் இணைந்து 350 படங்கள் வரை பணியாற்றியிருக்கின்றனர். எஸ்.பி.பியின் குரலில் இந்தி, மலையாளம் இரண்டு மொழிகளிலும் மிகவும் குறைவான பாடல்களையே இசைத்திருக்கும் இளையராஜா, தமிழிலும் தெலுங்கிலும் மிக அதிகமான பாடல்களை உருவாக்கி உள்ளார்.
இளையராஜா இசையில் அதிகப் பாடல்களைப் பாடிய பாடகர்களில் எஸ்.பி.பி. முதன்மையானவர். அப்படி இருக்கையில் ஒரு நாள் கூட இளையராஜா எஸ்.பி,பி பாடியதை நன்றாக இருக்கிறது என சொன்னதே கிடையாதாம். ஆனால் எஸ்.பி.பிக்கு அந்த ஆசை இருக்குமாம்.

sbp2
ஆனால் சொன்னதே இல்லையாம். ஆனால் ஒரு தெலுங்கு படத்திற்காக இளையராஜா எஸ்,பி.பிக்கு சொல்லிக் கொடுக்காமல் அவரே பாடி ரெக்கார்டு பண்ணி கேசட்டை கொடுத்தாராம். அதில் கேட்டு அப்படியே காப்பி அடிச்சு பாடிருனு சொன்னாராம்.
எஸ்.பி.பியும் அதே மாதிரி இளையராஜா எப்படி பாடியிருந்தாரோ அதே மாதிரி பாடி விட்டாராம்.ஆனால் அந்தப் பாடலை படத்தில் வைக்க வில்லையாம். அதே நேரத்தில் அந்தப் பாடலும் மிக நன்றாக வந்திருந்ததாம். அப்பொழுது தான் இளையராஜா சொன்னாராம் ‘இந்தப் பாடலை அருமையாக பாடியிருக்கிறாய் என்று’. இதை கேட்டதும் எஸ்,பி,பி ‘அப்பாடா இந்த வார்த்தையை கேட்பதற்கு எவ்வளவு வருடம் போராட வேண்டியிருக்கு’ என்று.