Connect with us

Cinema News

அர்ஜூனால் எனக்கு விஜய் படம் போச்சு.! புலம்பி தள்ளும் காமெடி நடிகர்.!

சினிமாவில் இந்த துணை நடிகர்கள் தான் ரெம்ப பாவம் போல. ஏனென்றால் அவர்கள் ஒரு ஹீரோ படத்தில் நடித்து கொண்டிருப்பர். அதே நேரத்தில் அது இந்த தேதியில் முடியும் என கூறியிருப்பார். கள் அதனை நம்பி இன்னோர் கம்பெனியில் அட்வான்ஸ் வாங்கி அந்த தேதியில் வருவதாக கூறி விடுவர்.

ஆனால், குறித்த தேதியில் அந்த பட ஷூட்டிங் முடியவில்லை என்றால், அடுத்த பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள முடியாது. இதனால், அந்த படக்குழு கோபித்து கொள்ளும். அடுத்தடுத்த படங்களுக்கு இந்த நடிகரை கூப்பிட அந்த நிறுவனம் யோசிக்கும்.

ஒரு படக்குழு ஷூட்டிங் நடத்த தாமதமானால், அது துணை நடிகர்களுக்கு இந்த மாதிரியான பாதிப்பை தான் ஏற்படுத்தும். ஆம், துணை நடிகர்களால் தாமதமான படக்குழுவிடம் அழுத்தமாக பேசவும் முடியாது.

அப்படிதான் காமெடி நடிகர் சிஸ்ஸர் மனோகருக்கு ஒரு முறை நிகழ்ந்துள்ளதாம். இவரை பழைய விஜய் அஜித் படங்களில்லாம் சிறு வேடங்களில் பார்த்து இருப்பீர்கள். இவர் அர்ஜுன் நடித்த ஏழுமலை படத்தில் நடித்து இருந்த போது, அந்த ஷூட்டிங் தாமதமானது.

இதையும் படியுங்களேன் – நடிப்பை விடுத்து அடுத்த தொழிலுக்கு தாவிய சிம்பு.! இது எத்தனை நாள்னு தெரியாலேயே.!?

 

அவர் விஜய் நடிப்பில் உருவான தமிழன் படத்தில் ஒரு முக்கிய காட்சியில் சிஸ்ஸர் மனோகர் நடிக்க வேண்டி  இருந்ததாம். பிறகு அங்கு ஷூட்டிங் இன்னும் முடியாததாலும், அர்ஜுன் குழு அவரை விட மறுத்ததாலும் இந்த விஜய் படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாம். இதனை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருப்பார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top