பீஸ்ட்ட தூக்கிட்டு கேஜிஃப்- 2 போடு!.. ஓவர் நைட்ல எல்லாம் மாறிப்போச்சே!...
மாஸ்டருக்க்கு பின் விஜய் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் படத்திற்கு பின் நெல்சன் இப்படத்தை இயக்கிதாலும், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதால் இப்படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் எதிரொலித்தது. நெல்சன் படமாகவும் இல்லாமால், விஜயின் படமாகவும் இல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாமல் இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.36 கோடியை தாண்டினாலும், அடுத்த நாள் வசூல் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 13ம் தேதி சுமார் 800 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. அடுத்த நாள் கேஜிஃப் - 2 வெளியானதால் பீஸ்ட் படத்திற்கு தியேட்டர்கள் குறைந்தது. தற்போது படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்து போனதால் தமிழகத்திலும் தியேட்டர்கள் குறைக்கப்பட்டு வருகிறது. கேஜிஎஃப் - 2 ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பலரும் படத்தை பாராட்டி வரும் நிலையில் இப்படத்திற்கு அந்த தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். கேரளாவில் 600 தியேட்டர்களில் பீஸ்ட் திரையிடப்பட்டது. தற்போது அது 200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 300 தியேட்டர்களில் வெளியான கேஜிஎஃப்-2 திரைப்படத்திற்கு மேலும் 150 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு 450 தியேட்டர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.