உள்ளே போனா வெளியே போக முடியாது!.. ரஜினியின் பண்ணை வீட்டில் நடப்பது என்ன?!..

by சிவா |
rajini
X

திரைத்துறையை சார்ந்த பல நடிகர்களுக்கும் பண்ணை வீடு இருக்கிறது. சத்தியராஜின் சொந்த ஊர் கோயம்பத்தூர் என்பதால் அந்த ஊரின் அருகேயுள்ள பொள்ளாச்சியில் அவருக்கு பண்ணை வீடு உள்ளது. அதேபோல், கவுண்டமணிக்கும் அதே பகுதியில் பண்ணை வீடு இருக்கிறது.

நடிகர் பிரகாஷ் ராஜும் சொந்தமாக பண்ணை வீடு வைத்திருக்கிறார். இது போல பல நடிகர்களுக்கும் பல ஊர்களில் பண்ணை வீடுகள் இருக்கிறது. அதேபோல், நடிகரும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்துக்கும் சென்னை கேளம்பாக்கத்தில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ரஜினி அங்கே நேரத்தை செலவழிப்பதுண்டு.

இதையும் படிங்க: நான் வேண்டாம்! என் பாட்டு மட்டும் வேணுமா? ரஜினியுடனான பழைய பகையை தீர்த்துக் கொண்டாரா?

கொரோனா ஊரடங்கு அமுலில் இருந்தபோது ரஜினி அங்குதான் இருந்தார். அவரின் மகள் சௌந்தர்யா வாங்கிய புதிய காரை கூட அவர் ஓட்டி பார்க்கும் வீடியோ அங்குதான் எடுக்கப்பட்டது. அந்த பண்ணை வீட்டில் சமையல், தோட்டங்களை பராமரித்தல் என ஒவ்வொன்றுக்கும் பணியாட்களை நியமித்துள்ளனர். நீச்சல் குளம் உட்பட சகல வசதிகளும் அங்கு இருக்கிறது.

rajini

அதேபோல், அங்கு கங்காதரன் என்கிற நாயும் இருக்கிறது. சுருக்கமாக கங்கா என அழைப்பார் ரஜினி. ரஜினியை பார்த்தாலே அந்த நாய் குஷியாகி அவரின் மேலை காலை வைத்து ஏறி அவரின் உடையையே அழுக்காகிவிடுமாம். இரவு நேரங்களில் அந்த நாயை ரஜினி அவுத்து விட்டுவிடுவார் எனவும் அந்த நாய் பண்ணை வீட்டை சுற்றி வரும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினி கமலைத் தாண்டி பாலசந்தருக்கு பிடித்த நடிகர்! இவர யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

அதோடு, அந்த வீட்டில் பணிபுரிவதற்கு சென்றால் 3 அல்லது 4 வருடங்கள் ஒப்பந்தம் போடப்படுமாம். அதுவரை அவர்கள் வெளியே செல்ல முடியாது எனவும் சொல்லப்படுகிறது. அதேநேரம், ஒப்பந்தம் முடிந்து அவர்கள் வெளியேற விரும்பினால் அவர்களுக்கு ஒரு நல்ல தொகையை கொடுத்து ரஜினி அனுப்பி வைப்பார் என சொல்லப்படுகிறது. பண்ணை வீட்டின் எல்லா நிர்வாகத்தையும் ரஜினியின் மனைவி லதா கவனித்துக்கொள்கிறார்.

ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். 20 நாட்கள் ஓய்வுக்கு பின் ஜூன் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Next Story