ரஜினியை ஹீரோவாக்காத பாலச்சந்தர்... பின்னணியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமலும் தமிழ்சினிமாவில் இருபெரும் ஜாம்பவான்கள். நட்பில் சிறந்தவர்கள். அன்று முதல் இன்று வரை இருவரும் திரையுலகில் கோலோச்சி வருகின்றனர். ஆரம்பத்தில் கமலும், ரஜினியும் ஒன்றாகத் தான் நடித்துக் கொண்டு இருந்தார்கள்.
கமல் நடித்த படங்களில் ரஜினி வில்லனாக நடித்து வந்தார். அந்தப் படங்களைப் பெரும்பாலும் பாலசந்தர் தான் இயக்கினார். ஆனால் ரஜினியின் நடிப்பை ரசித்த பாலசந்தர் அவரை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு பல வாய்ப்புகளைக் கொடுத்தார். ஆனால் அவர் ரஜினியை ஏன் ஹீரோவாக்கவில்லை. அவரிடம் கதை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு பதில் என்னன்னு பார்ப்போமா...
ரஜினியை அறிமுகப்படுத்துன பாலசந்தர் அவரை ஏன் ஹீரோவா அறிமுகப்படுத்தல... கலைஞானத்தை ஹீரோவா அறிமுகப்படுத்துனதுக்கு அப்புறம் தான் ரஜினிக்கே வாய்ப்பு கொடுத்தார். இதைப் பற்றி உங்க கருத்து என்னன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். அதற்குப் பிறகு ரஜினியே இல்லாமல் அவர் எடுத்த படங்கள் என்றால் பட்டினப்பிரவேசம், அவள் அப்படித்தான், நிழல் நிஜமாகிறது, மரோசரித்ரா ஆகிய படங்கள் தான். இதுல எந்தப் படத்துல ரஜினியை ஹீரோவாக்க முடியும்? ரஜினிகாந்தைக் கதாநாயகனாக ஆக்குவதற்கு சரியான கதை அமையாததால் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ரஜினிக்கு அவர் கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... கொட்டுக்காளி வசூலை அள்ளியதா? படத்தின் கிளைமாக்ஸால் பின்னடைவா?
ஆரம்பத்தில் இருவரும் சேர்ந்து நடித்த அத்தனைப் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு கட்டத்தில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தால் அது தயாரிப்பாளர்களுக்குத் தான் லாபம். நாம் அப்படியே தான் இருப்போம். அதனால் இனி தனித்தனியாக நடிக்கலாம் என கமல் தான் ரஜினிக்கு ஆலோசனை கூறினாராம். அதன்பிறகு தான் ரஜினி தனியாக நடிக்க ஆரம்பித்தார்.
ரஜினிகாந்தை பாலசந்தர் ஹீரோவாக அறிமுகப்படுத்தவில்லை. என்றாலும் முதல்முறையாக அவர் ஹீரோவாக அறிமுகமான படமே சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்குப் போனது என்றால் ஆச்சரியம் தான். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் 1978ல் எம்.பாஸ்கர் இயக்கத்தில் வெளியான படம்தான் பைரவி. இந்தப் படத்தில் வருக்கு ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு ரஜினிகாந்த் தனது தனித்திறமையால் உச்சநட்சத்திரமாகி விட்டார்.