72 வயதிலும் மாறாத இளமை... இதுதான் மம்முட்டியோட அந்த ரகசியமாம்!..

by sankaran v |
72 வயதிலும் மாறாத இளமை... இதுதான் மம்முட்டியோட அந்த ரகசியமாம்!..
X

Mamutty

கேரள சூப்பர்ஸ்டாராக கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் மம்முட்டி. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து தளபதி படத்தில் நடித்தார். இவர் நடித்த பல தமிழ்ப்படங்கள் மெகா ஹிட் தான். அதனால் தமிழில் இவரை மெகா ஸ்டார் என்றே ரசிகர்கள் அழைத்தனர். இவர் பேசும் மலையாள வாடை வீசும் தமிழ் வசனங்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

இப்போது இவரது வயது 72. ஆனால் இன்னும் இளமைப்பொலிவுடன் இருக்கிறார். என்ன காரணம்னு பார்க்கலாமா...

நடிகர் மம்முட்டி எப்போதும் டயட்டில் தான் இருப்பாராம். அசைவம் எண்ணை குறைவாக என்றால் மட்டுமே எடுத்துக் கொள்வாராம். அதுவும் அளவுடன் தான் சாப்பிடுவாராம். இவருக்கு என்று தனியாக சமையல்காரர் உண்டு. அதே போல இரவு 7 மணிக்கு முன்பே சாப்பிட்டு விட்டு அதன்பின் புத்தகம் வாசிப்பாராம். அதன்பிறகு சரியான நேரத்தில் தூங்கி விடுவாராம். தினமும் உணவில் இப்படி ஒரு ஒழுக்கத்தைத் தவறாமல் கடைபிடித்து வருகிறாராம்.

Makkal Aatchi

Makkal Aatchi

ஆர்.கே.செல்வமணி இயக்கிய படம் மக்களாட்சி. இந்தப் படத்தில் மம்முட்டி நடிக்கும்போது இரவு முழுவதும் டைரக்டர் காக்க வைத்து விட்டாராம். ஆனால் கடைசி வரை மம்முட்டி சம்பந்தப்பட்ட காட்சியை எடுக்கவில்லை. அதனால் கோபத்தில் கிளம்பி விட்டாராம் மம்முட்டி.

உடனே அதிகாலை 4 மணிக்கு மம்முட்டியின் மனைவியை அழைத்து நிலைமையை விளக்கமாகச் சொன்னாராம் செல்வமணி. உடனே நீங்க ஷாட் ரெடி பண்ணுங்கன்னு சொல்லிட்டு செல்வமணியின் மனைவி போனை வைத்து விட்டாராம். அதன்பிறகு மம்முட்டியின் கார் 10 நிமிடத்தில் திரும்பவும் ஸ்பாட்டுக்கு வந்ததாம். கோபமாக சென்றவர் சிரித்தபடியே காரில் இருந்து இறங்கி வந்து காட்சிகளில் நடித்துக் கொடுத்தாராம்.

அதற்குக் காரணம் தன்னை நம்பியவள் அதான் கட்டிய மனைவி சொல்லை மதிக்கும் உயர்ந்த குணம் மம்முட்டியிடம் இருந்ததாம். இளமை நீடிக்க வெறும் டயட் மட்டும் போதாது... கவலையற்ற வாழ்வும் வேண்டும். இதுதான் நாம் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

Next Story