விஜய் மீது ஓவர் பாசத்தில் சீமான்… ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திய தளபதி! அண்ணன இப்டி கேட்டுப்புட்டியேப்பா!
பக்கபலமாக பல இடங்களில் நின்ற சீமானை அவருக்கு தேவைப்படும் நேரத்தில் அசிங்கப்படுத்திய சம்பவம் குறித்த முக்கிய தகவல்கள் கோலிவுட்டில் வெளியாகி இருக்கிறது. இதை தன்னுடைய சகாக்களிடம் வருத்தமாக பல இடங்களில் பகிர்ந்தும் இருக்கிறாராம்.
விஜயின் படங்கள் வரிசையாக பிரச்னை சந்தித்து வந்த சமயம் ஒவ்வொரு படத்துக்கு வித்தியாசமாக பிரச்னைகள் வரிசை கட்டி வந்தது. அந்த சமயத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கத்தி. இந்த திரைப்படத்தினை தயாரித்த லைகா நிறுவனம். ராஜ பக்சேவின் கைக்கூலி என பலரும் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: தான் மட்டும் வளர்ந்தால் போதாது! அடுத்தவனையும் வாழ வைக்கனும் – விஜயால் ஒரே நாளில் ஓஹோனு வந்த நடிகர்
அவர்கள் தயாரிப்பில் விஜய் நடிப்பில் தமிழர்களின் மனதை நோகடிக்கும் என பல பிரச்னைகள் எழுந்தன. எரியிற வீட்டில் பிடுங்குற வரை லாபம் என்ற ரீதியில் வரிசையாக பலரும் அந்த படத்துக்கு பிரச்னையை கொண்டு வந்தனர். ஆனால் விஜயிற்கு ஆதரவாக இருந்தது சீமான் மட்டும் தான்.
ஒரு தமிழருக்கு நாம் பிரச்னையாக இருக்க கூடாது. விஜய் எனக்கு தம்பி. அவரின் படம் நல்ல படியாக வெளியாக வேண்டும் என ஆதரவாக இருந்தார். அந்த ஆதரவால் பல எதிர்ப்புகள் குறைந்தது. கத்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதில் மனம் நிறைந்த விஜய், சீமானிடம் ஆட்களை அனுப்பினார். எதுவும் வேண்டுமா எனவும் கேட்டார். ஆனால் சீமான் இல்லை தனக்கு தற்போது எதுவும் வேண்டாம் என மறுத்து விட்டார்.
இதையும் படிங்க: விருதுகள் பல வாங்கினாலும் இந்த ஒரு வார்த்தைக்கு ஈடாகுமா? சிவாஜியின் படத்தை பார்த்து பிரபலம் அடித்த கமெண்ட்
ஆனால் விஜய் அதில் எனக்கு என்ன லாபம் என சடாரென கூறிவிட்டாராம். இதில் சீமானுக்கு பெரிய ஏமாற்றம் ஆகிவிட்டதாம். தன்னுடைய பல சகாக்களிடம் விஜயின் இந்த செயல் குறித்து வருத்தமாக பகிர்ந்து கொண்டாராம். ஆனாலும் விஜயின் அரசியல் எண்ட்ரிக்கு இன்னமும் சீமான் ஆதரவே தெரிவித்து இருக்கிறார் என்பது ஆச்சரியமே!