என்னடா பண்ணி வச்சிருக்க?. எச்.வினோத்திடம் அந்த விஷயத்தை மட்டும் மாற்றச்சொன்ன சீமான்!..

by Rohini |
seeman
X

seeman vinoth

நடிகரும் இயக்குனருமான சீமான் இப்போது நாம் தமிழர் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அரசியல் மேடைகளில் பெரும்பாலும் தலையை காட்டி வரும் சீமான் சமீபகாலமாக படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அதிகளவு காணப்படுகிறார்.

seeman1

seeman vinoth

நேற்று கூட ‘ஓம் வள்ளிமயில்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சீமான் பேசினார். அவர் பேசிய கருத்துக்கள் வந்திருந்தோரை மிகவும் உற்சாகப்படுத்தியது. சும்மாவே அனல் பறக்கும் கருத்துக்களை தெறிக்க விடும் சீமான் நேற்று அந்த மேடையில் விவசாயம், தமிழின் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றி பேசினார்.

இதையும் படிங்க : விஷாலை குப்பை மேட்டில் படுக்க வைத்த டெரர் இயக்குனர்… இவர் இப்படி பண்ணாம இருந்தாத்தான் அதிசயம்…

மேலும் கத்தரிக்கை பயிடுவதற்கும் காட்டுல நிற்பதற்கும் எதற்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும்? நாம் என்ன அமெரிக்காவிலேயும் வெளி நாடுகளிலுமா நாட்டு நட போறோம்? தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் தெரியவில்லை என்றால் நாம் இருந்து என்ன பயன் ? என்று கூறினார்.

seeman2

vinoth

மேலும் அறிவியல் மருத்துவம் எந்த போக்கில் போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் அந்த காலத்தில் வீட்டு மருத்துவம் எந்த அளவு முக்கியமாகப்பட்டது என்பதை பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார் சீமான். இந்த நிலையில் தமிழை பற்றி பேசும் போது இயக்குனர் எச்.வினோத் பற்றி ஒரு விஷயம் கூறினார்.

அதாவது என் தம்பி தான் எச்.வினோத். அவனிடம் கேட்டேன் என்னடா அது எச் பேருக்கு முன்னாடி? என்று கேட்க அதற்கு இனிஷியல் என்று சொன்னான் வினோத். டேய் உன் பேருக்கு முன்னாடியாவது தமிழை வாழ வையுங்கடா என்று சொன்னதும் அதில் இருந்து அவன் அந்த எழுத்தை மாற்றிவிட்டான் என்று கூறினார் சீமான். ஆனால் சீமான் சொன்னது போல் வினோத் மாற்றினாரா இல்லையா என்று இதுவரை தெரியவில்லை.

Next Story