இவன் அடுத்த படம் எடுக்கிறது சந்தேகம்தான்..! -  வெற்றிமாறனை கலாய்த்துவிட்ட சீமான்!..

by Rajkumar |   ( Updated:2023-04-01 08:17:37  )
இவன் அடுத்த படம் எடுக்கிறது சந்தேகம்தான்..! -  வெற்றிமாறனை கலாய்த்துவிட்ட சீமான்!..
X

திரையில் வெளியான உடனேயே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது வெற்றிமாறன் இயக்கிய விடுதலை. விடுதலை திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்த படத்திற்கான ப்ரோமோஷன்கள் எல்லாம் வெகுவாக இருந்தன.

அதுவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. மேலும் படத்தில் நாயகனாக சூரி நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று வெளியான விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் நட்சத்திரங்கள் பலரும் கூட இந்த படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தை பார்த்த இயக்குனர் பாரதி ராஜா, வெற்றிமாறனை வெகுவாக பாராட்டியுள்ளார். நான் வயதில் வெற்றிமாறனை விட பெரிய மனிதனாக இருந்தாலும் அவனது திறமையை கண்டு வியக்கிறேன். நாம எல்லாம் சினிமாவில் இவ்வளவு காலம் என்ன சாதிச்சோம்னு இந்த படம் யோசிக்க வச்சிடுச்சு என கூறியிருந்தார்.

இரண்டாம் பாகம் குறித்து பேசிய சீமான்:

தமிழ் சினிமாவின் முன்னாள் இயக்குனரான சீமானும் இந்த படத்தை பார்த்தார். பல முக்கிய விஷயங்களை படம் பேசியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார். கண்டிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும். அதற்காக காத்திருக்கிறேன் என கூறினார் சீமான்.

மேலும் அவர் கூறும்போது வெற்றிமாறன் ஏற்கனவே வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறேன் என கூறிவிட்டு இப்போது வரை எடுக்கவே இல்லை. இவன் இரண்டாம் பாகம் எடுக்குறதே சந்தேகம்தான். அந்த மாதிரி விடுதலை படத்தையும் விட்டுடாம இரண்டாம் பாகத்தை எடுத்துடணும் என கூறியுள்ளார் சீமான்.

Next Story