Cinema News
விஜய் சின்னப் பையன்! எத்தனை தேர்தலை சந்திச்சவன் நான்? சீமானின் தெறிக்கவிட்ட பேச்சு
Vijay Seeman: விஜயின் அரசியல் சார்ந்த பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை நேரடியாக சந்திக்க இருக்கிறார் விஜய். தன் கட்சி பெயரை அறிவித்து முதன்முதலாக நடந்த ஒரு விழா தான் நேற்று நடந்த மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் திட்டம் சார்ந்த அந்த விழா .அதில் விஜய் அரசியல் சார்ந்து ஏதாவது பேசுவாரா என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் மாணவர்களுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அரசியல் என்ன என்பதை பற்றியும் தன்னுடைய அறிவுரைகளின் படி கூறிவிட்டு சென்றார் .இந்த நிலையில் விஜய் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஏனெனில் பெரிய மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு மாபெரும் நடிகராக விஜய் இருப்பதால் அவருடன் கூட்டணி வைக்க பல அரசியல் கட்சி தலைவர்கள் முன்னெடுப்பார்கள்.
இதையும் படிங்க: கங்கை அமரன் மறுத்ததால் பாக்கியராஜிக்கு கிடைத்த சான்ஸ்… இளையராஜாவின் பாடலில் இப்படி ஒரு கூத்தா?
அதனால் அவருடைய விருப்பம் எதுவாக இருக்கப் போகிறது என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சீமானிடம் தற்போது ஒரு பத்திரிக்கையாளர் விஜயுடன் கூட்டணி வைக்கப் போகிறீர்களா? 2026 வரை நீங்கள் எந்த கட்சியிடமும் கூட்டணி வைத்ததில்லை. விஜய்யுடன் கூட்டணி என்பது சாத்தியமாகுமா என ஒரு கேள்வி சீமான் முன்பு முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சீமான் ‘அது அவர்தான் முடிவு பண்ண வேண்டும். ஏனெனில் நான் அண்ணன். பெரியவன். விஜய் எனக்கு இளையவர். அவரைவிட நான் எட்டு வயது மூத்தவன். அதனால் விஜய் தம்பி. நான் அண்ணன். அவர்தான் முடிவு பண்ண வேண்டும். அண்ணனுடன் போவோமா வேண்டாமா என்பதை விஜய் முடிவு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: ‘கல்கி’ படம் பார்த்த சூப்பர் ஸ்டார்! படத்தை பற்றி என்ன சொல்லியிருக்காரு பாருங்க
நான் எத்தனை தேர்தலை சந்தித்து இருக்கிறேன்? ஐந்து வயதிலிருந்து அரசியல் களத்தில் நான் இருக்கிறேன். பெரிய பெரிய தலைவர்களுடன் நெருக்கமாக பழகி இருக்கிறேன் .அது மட்டும் அல்லாமல் என்னுடைய அரசியல் கனவே வேறு. நம் நாட்டை பெரிய அளவில் எப்படி கொண்டு போக வேண்டும்? வேளாண்மையில் எப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்?
கல்வி, நீரை எப்படி தேக்கி வைக்க வேண்டும்? நம் பிள்ளைகளுக்கு பெரியதொரு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற ஒரு இலட்சியத்தில் இருக்கிறேன். அதனால் அண்ணனுடன் இணைந்து அவருடைய கனவை நாமும் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும் என விஜய் முன் வர வேண்டும். அதுவும் இல்லாமல் இன்னும் ஓரிரு மாதங்களில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி விடுவார். அதன் பிறகு அவர் ஒரு வழியில் செல்வார். நான் ஒரு வழியில் செல்வேன். காலம் வரும்போது இருவரின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும் ’என சீமான் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: சோலோவா பின்னி பிடலெடுக்கும் தல! வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட் இதோ