Categories: latest news

விஜய் சின்னப் பையன்! எத்தனை தேர்தலை சந்திச்சவன் நான்? சீமானின் தெறிக்கவிட்ட பேச்சு

Vijay Seeman: விஜயின் அரசியல் சார்ந்த பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை நேரடியாக சந்திக்க இருக்கிறார் விஜய். தன் கட்சி பெயரை அறிவித்து முதன்முதலாக நடந்த ஒரு விழா தான் நேற்று நடந்த மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் திட்டம் சார்ந்த அந்த விழா .அதில் விஜய் அரசியல் சார்ந்து ஏதாவது பேசுவாரா என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் மாணவர்களுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அரசியல் என்ன என்பதை பற்றியும்  தன்னுடைய அறிவுரைகளின் படி கூறிவிட்டு சென்றார் .இந்த நிலையில் விஜய் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஏனெனில் பெரிய மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு மாபெரும் நடிகராக விஜய் இருப்பதால் அவருடன் கூட்டணி வைக்க பல அரசியல் கட்சி தலைவர்கள் முன்னெடுப்பார்கள்.

இதையும் படிங்க: கங்கை அமரன் மறுத்ததால் பாக்கியராஜிக்கு கிடைத்த சான்ஸ்… இளையராஜாவின் பாடலில் இப்படி ஒரு கூத்தா?

அதனால் அவருடைய விருப்பம் எதுவாக இருக்கப் போகிறது என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சீமானிடம் தற்போது ஒரு பத்திரிக்கையாளர் விஜயுடன் கூட்டணி வைக்கப் போகிறீர்களா? 2026 வரை நீங்கள் எந்த கட்சியிடமும் கூட்டணி வைத்ததில்லை. விஜய்யுடன் கூட்டணி என்பது சாத்தியமாகுமா என ஒரு கேள்வி சீமான் முன்பு முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சீமான்  ‘அது அவர்தான் முடிவு பண்ண வேண்டும். ஏனெனில் நான் அண்ணன். பெரியவன். விஜய் எனக்கு இளையவர். அவரைவிட நான் எட்டு வயது மூத்தவன். அதனால் விஜய் தம்பி. நான் அண்ணன். அவர்தான் முடிவு பண்ண வேண்டும். அண்ணனுடன் போவோமா வேண்டாமா என்பதை விஜய் முடிவு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: ‘கல்கி’ படம் பார்த்த சூப்பர் ஸ்டார்! படத்தை பற்றி என்ன சொல்லியிருக்காரு பாருங்க

நான் எத்தனை தேர்தலை சந்தித்து இருக்கிறேன்? ஐந்து வயதிலிருந்து அரசியல் களத்தில் நான் இருக்கிறேன். பெரிய பெரிய தலைவர்களுடன் நெருக்கமாக பழகி இருக்கிறேன் .அது மட்டும் அல்லாமல் என்னுடைய அரசியல் கனவே வேறு. நம் நாட்டை பெரிய அளவில் எப்படி கொண்டு போக வேண்டும்? வேளாண்மையில் எப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்?

கல்வி, நீரை எப்படி தேக்கி வைக்க வேண்டும்? நம் பிள்ளைகளுக்கு பெரியதொரு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற ஒரு இலட்சியத்தில் இருக்கிறேன். அதனால் அண்ணனுடன் இணைந்து அவருடைய கனவை நாமும் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும் என விஜய் முன் வர வேண்டும். அதுவும் இல்லாமல் இன்னும் ஓரிரு மாதங்களில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி விடுவார். அதன் பிறகு அவர் ஒரு வழியில் செல்வார். நான் ஒரு வழியில் செல்வேன். காலம் வரும்போது இருவரின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும் ’என சீமான் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: சோலோவா பின்னி பிடலெடுக்கும் தல! வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட் இதோ

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago