பிரச்சனை வரும்னு தெரிஞ்சே இந்த படத்தை எடுத்திருக்காங்க! –அயோத்தி படம் குறித்து பேசிய சீமான்!
கடந்த மார்ச் 03 ஆம் தேதி வெளியான திரைப்படங்களில் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் திரைப்படம் அயோத்தி. சசிக்குமார் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் டிவி புகழ் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பெயரே சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இத்தனைக்கும் படத்தின் இயக்குனருக்கு இதுதான் முதல் படம் என கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட கதையும் கூட அப்படியான அம்சத்தை கொண்டிருந்தாலும், சமூகத்திற்கு தேவையான விஷயத்தை இந்த படம் பேசியிருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்பு இயக்குனராக பணிப்புரிந்த சீமான் இந்த படத்தை பார்த்துள்ளார்.
இந்த படம் குறித்து சீமான் கூறும்போது “நாட்டு தேவையான மிக முக்கியமான கருத்தை இந்த படம் வெளிப்படுத்தியுள்ளது. இயக்குனர் மந்திர மூர்த்திக்கு இதுதான் முதல் படம். ஆனால் அதையும் சிறப்பாக செய்துள்ளார். உலகில் மதங்கள் பல இருந்தாலும் மனிதம்தான் அனைத்தையும் விட புனிதமானது என்பதை திரைப்படம் எடுத்துரைக்கிறது.
மேலும் இந்த படத்தின் கதை பிரச்சனையை ஏற்படுத்த கூடிய கதை என தெரிந்தும் இதை எடுக்க நினைத்ததற்கே படக்குழுவை பாராட்ட வேண்டும்” என அவர்களை பாராட்டியுள்ளார் சீமான். ஏற்கனவே அதிக வரவேற்பை பெற்ற அயோத்தி சீமானின் பேச்சால் மேலும் வரவேற்பை பெற்றுள்ளது.