Connect with us

Cinema News

மனிஷா யாதவுக்கு டார்ச்சர் கொடுத்தேனா?.. வீடியோ ஆதாரத்தை போட்டு சீனு ராமசாமி கொடுத்த பதிலடி!..

இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து டார்ச்சர் செய்த நிலையில் தான் அவர் சினிமாவை விட்டே ஓடி விட்டார் என்றும் அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி பகீர் கிளப்பி இருந்தார். இந்நிலையில், அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சீனு ராமசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய்சேதுபதி ஹீரோவாக அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய சீனு ராமசாமி நீர்பறவை, தர்மதுரை, மாமனிதன், கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மானுக்கே கச்சேரி நடத்த கிளாஸ் எடுப்பாரு போல!.. அனிருத்தின் ஹுகும் டூர்.. பேடாஸ் என்ன ஊறுகாயா?

மன்சூர் அலி கான் மற்றும் த்ரிஷா சர்ச்சை குறித்து வீடியோ வெளியிட்ட பிஸ்மி திடீரென இயக்குநர் சீனு ராமசாமி மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிஸ்மி தேவையில்லாமல் ரூட்டை மாற்றி விட்டாரா? என்கிற கேள்விகளும் எழுந்தன. இதுதொடர்பாக மனிஷா யாதவ் எந்தவொரு புகாரையும் இதுவரை வெளிப்படையாக சொல்லாத நிலையில், திடீரென பிஸ்மி ஏன் சீனு ராமசாமி பெயரை மட்டும் குறிப்பிட்டு குற்றம்சாட்டினார் என்றும் அவருக்கும் இவருக்கும் என்ன பகை என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: காதலருக்கே தெரியாமல் பாவனி பார்த்த வேலை!.. ரொம்ப கெட்ட பழக்கம் என எச்சரித்த அமீர்!..

மேலும், ஜீவா படத்தின் இயக்குனர் செய்த சேட்டை குறித்து சொன்ன பிஸ்மி அந்த இயக்குனர் பெயரை சொல்லவே இல்லை. இந்நிலையில், தன் மீது பிஸ்மி சொன்ன புகாருக்கு ட்விட்டர் பக்கத்தில் சீனு ராமசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

”வணக்கம்,

இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார்

ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க

10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க
திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க…

இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்.” என ட்வீட் போட்டு மனிஷா யாதவ் குப்பை கதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சீனு ராமசாமிக்கு நன்றி சொன்ன வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மனிஷா வாய் திறப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top