படப்பிடிப்பின் போது தீடீரென காணாமல் போன சீதா… பார்த்திபன் செய்த சித்து வேலை… இப்படியெல்லாம் நடந்திருக்கா??

Parthiban
1990 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் “மல்லுவேட்டி மைனர்” என்ற திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் சத்யராஜ், ஷோபனா, சீதா ஆகியோர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு நாள் சீதா, படப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லை. சீதா நடிக்க வேண்டிய காட்சிகள் பல இருந்தது. வெகு நேரமாக படக்குழுவினர் காத்திருந்தும் அவர் வரவில்லை.

Seetha
இதனால் சீதாவின் வீட்டிற்கு சென்ற தயாரிப்பு நிர்வாகி, அங்கே சீதாவின் தந்தை சோகமாக உட்கார்ந்திருந்ததை பார்த்திருக்கிறார். அவரை விசாரித்தபோது அவர் பார்த்திபனுடன் வீட்டை விட்டு வெளியேறியிட்டதாக தெரிய வந்தது. மேலும் அன்று காலையில் சீதாவிற்கும் பார்த்திபனுக்கும் திருமணமும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பார்த்திபனை சென்று பார்த்த தயாரிப்பு நிர்வாகி, “சீதா படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். ஆதலால் சீதாவை படப்பிடிப்பிற்கு அனுப்புங்கள்” என கூறியிருக்கிறார்.

Parthiban
ஆனால் பார்த்திபனோ “சீதாவின் தந்தை படப்பிடிப்பிற்கு வந்து கலாட்டா செய்வார்” என பயந்திருக்கிறார். அதற்கு தயாரிப்பு நிர்வாகி “அப்படி எதுவும் நேராமல் நான் பார்த்துக்கொள்கிறேன். மாலை படப்பிடிப்பு முடிந்தவுடன் சீதாவை நான் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பிவைக்கிறேன். இது என் பொறுப்பு” என கூறியிருக்கிறார். மேலும் சீதாவின் தந்தையிடமும் சென்று அவரை சமாதானப்படுத்தினாராம் தயாரிப்பு நிர்வாகி. எனினும் கடந்த 2001 ஆம் ஆண்டு சீதாவும், பார்த்திபனும் விவாகரத்து பெற்று விட்டனர்.