நண்பர்களை வைத்து சீதாவை கடத்திய பார்த்திபன்... இப்படியெல்லாமா ட்விஸ்ட் கொடுப்பீங்க...

by Akhilan |   ( Updated:2022-10-20 08:18:03  )
சீதா பார்த்திபன்
X

சீதா பார்த்திபன்

சினிமாவில் தான் சில எதிர்பார்க்க முடியாத தருணங்கள் நடக்கும் என்றால் இல்லை. சிலரின் நிஜ வாழ்க்கையும் அப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் தான் நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதாவின் காதல் திருமணம்.

பார்த்திபன் இயக்கத்தில் உருவான படம் தான் புதிய பாதை. இப்படத்தில் நிறைய கதாநாயகிகளிடம் கதை சொல்லியும் அவர்கள் நோ சொல்லி விட்டனர். இந்நிலையில், கடைசியாக சீதாவிடமும் புதிய பாதை கதையை சொல்லியிருக்கிறார் பார்த்திபன். சீதா மற்றும் அவரது அப்பாவிற்கு இப்படத்தின் கதை ரொம்ப பிடித்தது என்பதால் உடனே ஓகே சொல்லி இருக்கிறார்கள். படப்பிடிப்புகள் துவங்கப்பட்டது. அங்கு இருவருக்கும் நெருக்கம் அதிகமாக நட்பு கூட ஏற்படாமல் பார்த்திபனிடம் நேரடியாக காதல் வலையில் விழுந்து விட்டாராம் சீதா.

பார்த்திபன்

சீதா பார்த்திபன்

இந்த நேரத்தில் தான் ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததாம். சீதா தன்னை காதலிக்கிறார் எனத் தெரிந்த பார்த்திபன் அந்த மூணு வார்த்தையை சொல்லிடுங்கனு காதல் தொல்லை கொடுத்திருக்கிறார். சீதாவும் வீட்டு போன் மூலம் தனது காதலினை பார்த்திபனிடம் சொல்லிவிட்டார். ஆனால், ஒரே போன்லைனில் இன்னொரு போனில் சீதாவின் அப்பா இதை கேட்டு விட்டார். இந்த காதலுக்கு ஒப்புக்கொள்ளவே மாட்டேன் என அவருக்கும் சீதாவிற்கும் பெரிய சண்டை வெடித்தது.

இதனால் சீதா அப்பா அவருக்கு வேறு மாதிரியான தண்டனை கொடுத்தார். எக்கசக்க படங்களில் கமிட் செய்தார். ஒரே நாளில் மூன்று படங்களின் ஷூட்டிங் செல்ல நேர்ந்தது. இதனை எல்லாம் பார்த்திபனுக்கு கடிதம் மூலம் தெரிவித்த சீதா உடனே தன்னை கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டும் என கடிதம் போட்டார். இதனால் உடனே சீதாவினை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தார் பார்த்திபன். ஆனால் தேதி மற்ற விவரங்களை சீதாவிடம் சொல்ல அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

பார்த்திபன்

சீதா பார்த்திபன்

இப்போது ஷூட்டிங் செல்லும் சீதாவினை வெளியில் கூட்டி வர வேண்டும். எப்படியும் 6 மணி ஷூட்டிங் என்றால் 5.30 மணிக்கெல்லாம் சீதா கிளம்பிடுவாங்க. அப்போ கூப்பிட்டு வந்து விடலாம் என ஐடியா செய்தனர். அடுத்த நாளே காலையில் சூட்டிங்கிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார் சீதா. அவர் காரினை வழி மறித்த பார்த்திபன் நண்பர்கள் விஷயத்தைச் சொல்லி அழைத்து வந்தனர். படப்பிடிப்புக்கு கிளம்பியதால் சுடிதாரில் வந்த சீதா பட்டுப்புடவை உடுத்திக் கொண்டு மணமகளானார். பார்த்திபன் மற்றும் சீதா திருமணம் நண்பர்கள் புடைசூழ திருமணம் இனிதாக நடந்தது.

இதனால் கோபத்தின் உச்சிக்கே போன சீதாவின் தந்தை, பார்த்திபன் மீது கொலைவெறியில் இருந்தாராம். பார்த்திபனின் நண்பர் ஒருவரிடம் போன் செய்து “இனி உன் நண்பன் விபரீதமான பல முடிவுகளை பார்ப்பான். ஜாக்கிரதையாக இருக்க சொல்லு என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

Next Story