என்னக் கண்டாலே அந்த நடிகைக்கு ஆகாது!.. மனம் திறக்கிறார் பாண்டியராஜன்!..

Published on: February 17, 2023
pandi
---Advertisement---

நகைச்சுவை பாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் சமீபகாலமாக நடித்து வருபவர் நடிகர் பாண்டியராஜன். பாக்யராஜை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். அவர் மீது அலாதி அன்பும் பிரியமும் கொண்டவராக இருந்தவர் தான் பாண்டியராஜன். சில காலம் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

pandi1
pandiarajan

அதன் பின் சொந்தமாக படத்தை இயக்கும் பணியில் முற்பட்டார். ஆண்பாவம் படம் இவர் இயக்கி நடித்த முதல் படம். ஹீரோவாக நடித்த முதல் படமாக ஆண்பாவம் அமைந்தது. ஆனால் இயக்கிய முதல் படம் கன்னிராசி திரைப்படம்.

ஆண்பாவம் திரைப்படத்தில் இவருடன் பாண்டியன், ரேவதி, சீதா, பார்த்திபன் என பல நடிகர்கள் நடித்திருந்தனர். சிறந்த படத்திற்கான விருதை இந்தப் படம் பெற்று தந்தது. ஆனால் இந்த படத்தில் சீதாவை நடிக்க வைக்க பாண்டியராஜன் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமில்லை.

முதலில் சீதாவை புகைப்படத்தில் பார்த்து நேராக அவரது வீட்டிற்கே சென்று சீதாவை நடிக்க வைக்க அவரது தந்தையிடம் அனுமதி வாங்கியிருக்கிறார். ஆனால் முதல் சந்திப்பிலேயே பாண்டியராஜன் மீது சீதாவிற்கு நம்பிக்கை இல்லையாம். இவரெல்லாம் ஒரு இயக்குனரா? என்று கேட்டாராம்.

pandi2
pandiarajan

அதன் பிறகு கன்னிராசி படத்தை பற்றி கூற அது நீங்கள் இயக்கியதா என்று கேட்டிருக்கிறார். உடனே அந்தப் படத்திற்கான டிக்கெட்டை கொடுத்து பார்க்க சொல்லியிருக்கிறார். அந்தப் படத்தை பார்த்து விட்டு தான் நடிக்கவே சம்மதித்தாராம் சீதா. இது முடிந்து நடிக்க வந்துவிட்டார் சீதா. ஆனால் படப்பிடிப்பில் இவருக்கும் சீதாவிற்கும் ஒரே போர்க்களமாகவே இருந்திருக்கிறதாம்.

இவர் இல்லாத நேரத்தில் பாண்டியராஜனை blood pressure எங்கே என்று தான் சீதா கேட்பாராம். அது பாண்டியராஜனுக்கு சீதா வைத்த பட்டப் பெயர். இதே போல் பல சமயங்களில் சீதாவிற்கும் பாண்டியராஜனுக்கு சிறியதாக வாக்குவாதம் கூட வருமாம். இதைப் பற்றி ஒரு பேட்டியில் கூறும் போது பாண்டியராஜன்,

pandi3
seetha

என்னைக் கண்டாலே சீதாவிற்கு பிடிக்காது என்றும் அவ்வப்போது தகராறு ஏற்படும் என்றும் கூறினார். ஆனால் கடைசி நேரத்தில் படத்தை பார்த்து விட்டு சீதா பாண்டியராஜன் காலில் விழுந்தாராம். நான் எதாவது தவறுதலாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று சொல்லி மன்னிப்பு கேட்டாராம். இதை அந்தப் பேட்டியில் பாண்டியராஜன் கூறினார்.

இதையும் படிங்க : ச்சீ இவ்வளவு கெட்டவார்த்தையா?!.. பேசியது விஜய் சேதுபதிதான்.. ஆனா அவரு இல்லையாம்!..