“பார்த்திபன் கிட்ட நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்’.. ஆனா அவரோ?? கண்கலங்கும் சீதா..

Published on: September 14, 2022
---Advertisement---

தமிழின் தனித்துவமான இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்பவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த முதல் திரைப்படமான “புதிய பாதை” சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

இதனை தொடர்ந்து “ஹவுஸ் ஃபுல்”, “இவன்”, “குடைக்குள் மழை” என பல வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வந்த பார்த்திபன் சமீபத்தில் “இரவின் நிழல்” என்ற திரைப்படத்தை உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இயக்கி சாதனை புரிந்தார்.

இதனிடையே பார்த்திபன் கடந்த 1990 ஆம் ஆண்டு நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் 2001 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகை சீதாவிடம் நிருபர் “எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால் தான் நீங்கள் பார்த்திபனிடம் இருந்து பிரிந்தீர்களா?” என ஒரு கேள்வியை கேட்டார்.

அதற்கு பதிலளித்த சீதா “ஆம்! எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தது தான். நான் ஒரு சராசரி பெண். உலகம் அறியாத ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்த பெண். பார்த்திபனும் என்னை போலவே மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர் தான்.

நான் பணத்தை எதிர்பார்த்து போகும் அளவுக்கெல்லாம் அவரும் இல்லை. ஆதலால் நான் பணத்தை எல்லாம் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் நான் எதிர்பார்த்தது என்னவோ, அவருடைய முழுமையான அன்பு தான். இவ்வளவு தான் நான் எதிர்பார்த்தது. ஆனால் இது கூட அங்கு இல்லை என்றால் வாழ்க்கையில் வேறு என்ன இருக்கிறது” என அவர் மிகவும் கண்கலங்கி கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.