Ajith: அஜித்தும் இல்ல.. தனுஷும் இல்ல! சூரியாம்.. இது என்ன புது ட்விஸ்டா இருக்கு?

by Rohini |   ( Updated:2025-04-03 08:22:08  )
soori 1
X

soori 1

Ajith: தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி அதன் பிறகு இப்போது ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சூரி. முதலில் பரோட்டா சூரி என்றுதான் அனைவரும் அவரை அழைத்து வந்தனர். வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் ஒரு காமெடி காட்சியில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் சூரி. அதிலிருந்து அவர் பரோட்டா சூரி என்று தான் அழைக்கப்பட்டார்.

அதற்கு முன் சின்னத்திரையில் சில தொடர்களில் நடித்திருக்கிறார். மதுரையை பூர்வீகமாக கொண்ட சூரி இன்று ஒரு பெரிய அந்தஸ்தை அடைந்தாலும் சொந்த ஊரின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மறக்காதவராக தான் இன்று வரை திகழ்ந்து வருகிறார். தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வரும் சூரி இனிமேல் காமெடிக்கு நோ என்று சொல்லிவிட்டார்.

விடுதலை படத்தின் மூலம் சூரியை கதாநாயகனாக ஆக்கியவர் வெற்றிமாறன். அதை தொடர்ந்து கொட்டுக்காளி, கருடன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து இன்று சிவகார்த்திகேயன் தனுஷ் இவர்கள் ரேஞ்சுக்கு இணையாக பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் சூரியின் அடுத்த படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகி உள்ளது. செல்ஃபி என்ற படத்தை இயக்கிய மதிமாறன் அடுத்ததாக சூரியை வைத்து ஒரு படத்தை எடுக்கப் போகிறாராம் .

இந்தப் படத்தை விடுதலை படத்தை தயாரித்த எல்ரெட்தான் தயாரிக்க இருக்கிறார்களாம். ஏற்கனவே எல்ரெட் நிறுவனம் அஜித்தை வைத்து ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்தது. அஜித் சிறுத்தை சிவா கூட்டணி மீண்டும் அமையப் போகிறது. அந்தப் படத்தைத்தான் எல்ரெட் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அதன் பிறகு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் ஒரு படத்தை தயாரிப்பதாகவும் இருந்தது .

soori

ஆனால் இப்போது அஜித் தனுஷ் இவர்கள் யாரும் இல்லாமல் சூரியை வைத்துதான் எல்ரெட் நிறுவனம் படத்தை தயாரிக்க போகிறார்கள். சமீபகாலமாக சூரியின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் மதிமாறன் இயக்கும் இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள் இருக்கிறது. செல்ஃபி படம் மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story