இந்தியாவை கொச்சைப்படுத்துகிறாரா?.. பெண்களின் பாதுகாப்பு குறித்து செல்வமணி அளித்த பேட்டி!..

by Rohini |   ( Updated:2023-04-01 18:58:40  )
selvamani
X

selvamani

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வமணி. சினிமாவில் பல திருப்பங்களை ஏற்படுத்திய படங்களை கொடுத்தவர். விஜயகாந்தின் புலன் விசாரணை, கேப்டன் விசாரணை போன்ற ஹிட் படங்களை கொடுத்தார்.

இன்று வரை செல்வமணி என்றால் செம்பருத்தி படம் தான் நம் நியாபகத்திற்கு வரும்.
அப்படி பட்ட ஒரு காதல் கதை. அதை கொடுத்தவரும் இவர் தான். நடிகை ரோஜாவை
காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று ‘ நாவல்’ என்ற படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வந்து சிறப்புரை ஆற்றினார் செல்வமணி. அந்த நாவல் திரைப்படத்தை ஐஸ்வர்யா என்ற ஒரு பெண் இயக்குனர் இயக்கியிருக்கிறார்.அதனால் பெண் இயக்குனர்கள் இன்று தமிழ் சினிமாவிற்கு வருவது பெருமையாக இருக்கிறது என்று பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச ஆரம்பித்தார்.

அப்போது அவரது வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்களை கூறினார். அவரது மூத்த
மகள் அமெரிக்காவில் படிக்கிறாராம். தனியாகத்தான் சென்றிருக்கிறாராம். முதலில்
பாம்பேக்கு போய் படித்தாராம்.

பாம்பேக்கு அனுப்பும் போது அவரது பாட்டியையும் சேர்த்து அனுப்பி வைத்தாராம்.
அப்போது அவரது மகள் பாட்டி எதற்கு என கேட்டாராம். அதற்கு செல்வமணி பாம்பேயில் பாதுகாப்பு கிடையாது, உன்னை பற்றி எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அதை சுற்றி இருக்கும் சமூகம் தான் பிரச்சினை என்று கூறினாராம்.

அதே இன்று அமெரிக்காவில் தனியாக அனுப்பியவர் அமெரிக்காவில் பெண்களின்
பாதுகாப்பு பற்றி கவலை கொள்ள தேவையில்லை, எந்த பிரச்சினையும் அங்கு இருக்காது என கூறியிருக்கிறார். இவர் சொல்வதில் இருந்து இந்தியாவை விட அமெரிக்காவில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என சொல்ல வருவதை போல் இருக்கிறது.

.

Next Story