‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் செல்வமணி பட்ட அவமானம்!.. விஜயகாந்த் என்ன செய்தாருனு தெரியுமா?..

by Rohini |   ( Updated:2022-11-25 07:08:08  )
selva_mani_cine
X

விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை கொடுத்த இயக்குனர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் செல்வமணி. ஆரம்பத்தில் மணிவன்னனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அதன் பின் விஜயகாந்தை வைத்து புலன் விசாரணை படத்தை இயக்கினார்.

selva_mani_cine

விஜயகாந்த்

இது தான் செல்வமணி எடுத்த முதல் திரைப்படம். . விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் ரூபி ஆனந்த்ராஜ், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

விஜயகாந்தின் 100வது படம்

இதனையடுத்து 1991 ஆம் ஆண்டில் மீண்டும் விஜயகாந்துடன் கைகோர்த்தார் செல்வமணி. விஜயகாந்தின் 100 வது படமாக கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அமைந்தது. குறிப்பாக சினிமாவில் பல முன்னனி நடிகர்களுக்கு அவர்களின் 100வது படங்கள் தோல்வியையே சந்தித்திற்கும் வேளையிம் விஜயகாந்திற்கு மட்டும் அவரது 100வது படம் யாரும் எதிர்பாராத அளவில் இமாலய வெற்றி பெற்றது.

selva2_Cine

விஜயகாந்த்

இந்த படத்தில் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் போன்றோர் நடித்திருந்தனர். மன்சூர் அலிகானுக்கு கேப்டன் பிரபாகரன் படம் தான் முதல் படம். இந்த படத்தை விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் தான் தயாரித்தார்.

ராவுத்தருடன் பிரச்சினை

பொதுவாக ராவுத்தருக்கும் செல்வமணிக்கும் இடையே அவ்வப்பொழுது சில பல பிரச்சினைகள் வெடித்துக்கொண்டே இருந்ததாம். கிட்டதட்ட ஒன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் கூட பேசாமல் இருந்திருக்கின்றனராம். கேப்டன் பிரபாகரன் படம் பண்ணும் போது கூட ராவுத்தரும் செல்வமணியும் பேசிக்கொள்ளமாட்டார்களாம்.

அவர்களுக்கு இடையே இணைப்பு பாலமாக தொடர்பு கொள்ள சில பேர் இருந்திருக்கின்றனர். மேலும் செல்வமணியை சுற்றி அவருக்கு பிடிக்காத ஆள்களே இருந்திருக்கின்றனர். எது வேண்டுமென்றாலும் மனசு விட்டு கேட்க முடியாத நிலையில் தான் இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார். அப்போது கேப்ட பிரபாகரன் படத்தில் ஒரு காட்சியில் முதலில் மன்சூர் அலிகான் அந்த கிராமத்தை பெட்ரோல் குண்டு போட்டு தகர்த்திவிடுவார்.

selvava3_cine

விஜயகாந்த்

அதன் பின் சில நேரம் கழித்து விஜயகாந்த் வந்து அந்த கிராமத்தை பார்ப்பார். இது தான் சீன். விஜயகாந்திடம் செல்வமணி ‘ நீங்கள் மதிய நேரம் வந்தால் போதும்’ என்று சொல்லி அனுப்பி விட்டாராம். படப்பிடிப்பிற்காக 200 குடிசை போட்ட வீட்கள் ரெடி, 200 குதிரைகள் ரெடி ஆனால் படப்பிடிப்பு நடக்கவில்லையாம்.

பெட்ரோலால் வந்த பிரச்சினை

காரணம் பெட்ரோல் குண்டு போட பெட்ரோல் இல்லையாம். அது இவர்கள் படப்பிடிப்பு நடந்த கிராமத்தில் இருந்து செங்கல்பட்டு போய் தான் வாங்க வேண்டுமாம். சரி வாங்க வேண்டியது தானே என்று செல்வமணி கூற படக்குழுவில் ஒருத்தர் காசு இல்லை என அசால்டாக பதில் சொல்லியிருக்கிறார்.

இன்னொரு விஷயம் என்னவெனில் சூட்டிங்னு வந்துவிட்டாலே செல்வமணி தான் அங்கு கிங்.இதை அவரே சொல்லியிருக்கிறார். இதனால் தான் நிறைய முன்னடி நடிகர்கள் என்னுட பணியாற்ற வில்லை எனவும் அவரே கூறியிருக்கிறார். இந்த குணத்தால் தான் படப்பிடிப்பில் அவரை பிடிக்காமல் சில பேர் அவரின் தேவைகளை நிறைவேற்றாமல் அவமானப்படுத்தியிருந்தனர்.

விஜயகாந்தின் பெரிய எண்ணம்

நேரம் ஆனதும் விஜயகாந்த் படப்பிடிப்பிற்கு வர இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை என்பதை அறிந்து அங்கு இருந்தவர்களையு, செல்வமணியையும் பிடிச்சு சத்தம் போட்டாராம். மேலும் 20 லிட்டர் பெட்ரோல் தேவைக்கான ரூபாயையும் அவரே கொடுத்து வாங்க அனுப்பியிருக்கிறார் விஜயகாந்த்.

selva4_cine

விஜயகாந்த்

Next Story