More
Categories: Cinema History Cinema News latest news

செல்வமணிக்கு புலன் விசாரணை படத்தில் ஏற்பட்ட அவமானம்… இதுக்கு கூட வாய்ப்பு கொடுக்கலையாம்…

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக கருதப்படும் ஆர்.கே. செல்வமணிக்கு அவரின் முதல் படத்தின் வாய்ப்பு அத்தனை எளிதாக கிடைக்கவில்லையாம். அதற்கு அவர் பட்ட அவமானங்கள் கூட அதிகம் எனக் கூறப்படுகிறது.

பிலிம் இன்ஸ்டியூட்டில் சினிமா படித்தவர் செல்வமணி. தொடர்ந்து மணிவண்ணனிடம் சில காலம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்போது அவருக்கு ஆக்‌ஷன் படங்கள் எடுக்க வேண்டும் என்பதே மிகப்பெரிய கனவாக இருந்ததாம். தொடர்ந்து சிவகுமாரிடம் கதை சொல்லி இருக்கிறார். புது இயக்குநர்களிடம் நடிப்பது இல்லை எனக் கூறிவிட்டாராம். இதே பதில் தான் சத்யராஜிடம் வந்து இருக்கிறது.

Advertising
Advertising

rowther – vijayakanth

தொடர்ந்து, அப்போது தான் ஊமை விழிகள் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று இருந்தது. அப்படத்தினை ஒரு புதுமுக இயக்குனர் தான் இயக்கினார் என்பதால் விஜயகாந்திடம் கதை சொல்லலாம் என எண்ணி அவரை காண சென்றார். ஆனால் அங்கு விஜயகாந்தினை சந்திக்க இயலவில்லை. இப்ராகிம் ராவுத்தர் விஜயகாந்தின் கால்ஷூட் 2 வருடம் ப்ரீயாக இல்லை எனக் கூறிவிட்டார்.

ஆனால் அவரின் மனதை கவர ஹாலிவுட் நாயர்களின் ஸ்டில்களில் விஜயகாந்தின் ஸ்டில்களை வைத்து புலன் விசாரணை கதையை ராவுத்தரிடமே கூறி இருக்கிறார். இதை கேட்ட அவருக்கு கதை ரொம்ப பிடித்து விட்டதாம்.

உடனே படப்பிடிப்புகள் துவங்கினால் கூட விஜயகாந்திடம் பேசவே முடியவில்லையாம். பிறர் மூலம் தான் காட்சிகள் குறித்து விளக்க முடியுமாம். இதில் படக்குழுவில் இருந்த சிலர் விஜயகாந்திடம், செல்வமணியை குறித்து தவறாக சித்தரித்து வைத்திருந்தனராம்.

pulan visaranai

இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு இடையே படத்தினை முடித்தார். 1990ம் ஆண்டு தை பொங்கல் தினத்தில் படம் ரிலீஸ் ஆகியது. ஆனால் மொத்த படக்குழு முதல்நாள் காட்சிக்கு சென்ற நிலையில், இயக்குனரை படம் பார்க்க விடாமல் தியேட்டர் வாசலிலேயே நிறுத்தினராம்.

ராவுத்தர் இந்த படம் ஓடவில்லை என்றால் இல்லை என்னை பார்க்கவே வராதே எனக் கூறிவிட்டாராம். ஆனால் அவர் வார்த்தைக்கு மாறாக புலன் விசாரணை படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனையை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts