சொன்னது வேறு நடந்தது வேறு...! பீஸ்ட் பட நடிகருக்காக கேரவனையே மாத்திய செல்வராகவன்..!
விஜய் நடிப்பில் வெளியாகி தற்போது திரையரங்கில் ஏகப்பட்ட விமர்சனங்களோடு திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜாஹெக்டே மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். நெல்சன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் அவர்கள் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் வில்லன் கம் காமெடி கலந்த அரசியல்வாதியாக ஷாஜிசென் நடித்திருப்பார். இவர் ஏற்கெனவே டாக்டர் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார். இலக்கியவாதியும் கூட. பீஸ்ட் படத்தில் இவரின் முக்கால் வாசி காட்சி இயக்குனர் செல்வராகவன் கூடதான் இருக்கும்.
ஆதலால் முதல் நாள் சூட் அப்போ கேரவனில் பின்னாடி அறையில் ஷாஜி அமர்ந்து போனில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். முன் அறையில் யாரும் இல்லைனு சத்தமா பேசிக்க்கொண்டு இருந்தாராம். திடீரென இவர் அறையின் கதவு தட்ட திறந்து பாத்தால் செல்வராகவனின் மேனேஜர் கடும்கோபத்துடன் பக்கத்துல எவ்ளோ பெரிய டைரக்டர் இருக்கார் மெதுவா பேசதெரியாதானு எச்சரிக்கை விட்டு போய் விட்டாராம்.
உடனே ஷாஜி அவர்கள் படக்குழுவினரிடம் என்னால யாருக்கும் தொந்தரவு வேண்டாம் ஒன்னு எனக்கு ரூம் மாத்துங்க இல்ல வேற எதாவது பண்ணுங்கனு சொல்ல செல்வராகவனே வேற கேரவனுக்கு போய்விட்டாராம்.